Published:Updated:

அடடா... ஆன்டோவா!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்ரீடர்ஸ்

அடடா... ஆன்டோவா!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்ரீடர்ஸ்

Published:Updated:

படங்கள்: எம்.உசேன்                                    ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அடடா... ஆன்டோவா!

125

##~##

ஆன்டோவா 

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு, மைதா - தலா அரை கப், சுரைக்காய் துருவல் - 2 கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல், மிளகுத்தூள், சீரகம், தேன் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,  பால் -  ஒன்றரை டம்ளர் (அல்லது தேவைக்கேற்ப), வறுத்த எள் - ஒன்றரை டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு,

செய்முறை: வெண்ணெயுடன் சமையல் சோடா கலந்து நன்றாக அடிக்கவும். மாவுகளை அதில் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் எள் தவிர மற்ற பொருட்களை சேர்த்துக் கலந்து கேக் மாவு தயாரிப்பது போல் நன்றாக இடித்து மிருதுவாக கேக் மாவு பதத்தில் எடுக்கவும். 'மைக்ரோவேவ் அவன்’ பேக்கிங் ட்ரேயில் மாவைப் பரப்பி, வறுத்த என்ளை மேலே தூவவும்.   'மைக்ரோவேவ் அவன்’-ஐ ப்ரீஹீட் செய்தபின் ட்ரேயை உள்ளே வைத்து 180 டிகிரி செல்ஷியஸில் 30-40 நிமிடம் பேக் செய்யவும். குச்சியால் குத்திப் பார்க்கும் போது மாவு ஒட்டாவிட்டால், எடுத்துவிடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு, சாஸ் உடன்  பரிமாறவும்.

- என்.ராஜேஸ்வரி, மதுரை

அடடா... ஆன்டோவா!

பிரெட் பால்ஸ் கிரேவி

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 5, தக்காளி - 3, பெரிய வெங்காயம் - 2, கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், குடமிளகாய் - (சிறியது), கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியுடன், புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தை தனியாக அரைக்கவும். குடமிளகாய், கேரட், பீன்ஸை நறுக்கி வைக்கவும்.

அடடா... ஆன்டோவா!

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் வெங்காய விழுது சேர்த்து வதக்கி, தக்காளி விழுதை சேர்த்து சுருள வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கியபின் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு காய்கறிகளை வேகவிடவும். தண்ணீர் குறைந்து, வெந்து வந்ததும் பொரித்து வைத்துள்ள பிரெட் பால்ஸ் போட்டு கிளறவும். மேலும் சிறிது நேரம் வைத்திருந்து கிரேவியாக வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கேரட், பிரெட் இரண்டும் இனிப்பு என்பதால், காரம் சற்று கூடுதலாக இருந்தால் சுவையை கூட்டும்.

- யசோதா பழனிச்சாமி, ஈரோடு

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஆன்டோவா: பூசணிக்காயிலும் இதை செய்யலாம்.

பிரெட் பால்ஸ் கிரேவி: ஊற வைத்து, அரைத்த முந்திரி, பாதாம் சிறிதளவு சேர்த்து தயாரித்தால்... சுவை மேலும் அசத்தும்.