Published:Updated:

சாப்பிட வாங்க!

சாப்பிட வாங்க!

சாப்பிட வாங்க!

சாப்பிட வாங்க!

Published:Updated:
சாப்பிட வாங்க!
##~##

ஹோட்டல்: அமராவதி
லேண்ட் மார்க்: 1, கதீட்ரல் சாலை
(டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை -
மியூசிக் அகாடமி எதிரில்), மயிலாப்பூர்,
சென்னை-4
உணவு: ஆந்திரா சைவ - அசைவ உணவு வகைகள்
செலவு: ஒரு நபருக்கு

சாப்பிட வாங்க!

300 முதல்  

சாப்பிட வாங்க!

500 வரை.

ர் உணவகத்தின் தூய்மை, உணவுகள் வழங்கப்படும் விதம், உணவு வகைகள், சுவை, தரம், விலை என பலவிதமான காரணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு உணவகத்தையும் வாசகர் முன் படம்பிடித்துக் காட்டும் இப்பகுதியில் இந்த முறை இடம்பிடிக்கிறது... ஆந்திர உணவகமான 'அமராவதி’!

சென்னையின் நெரிசலான மத்திய பகுதியில் அமராவதி அமைந்திருந்தாலும் நல்ல காற்றோட்டமான இடமும், கார் பார்க்கிங் வசதியும் இருப்பது ஆச்சர்யமான விஷயம். முழுவதுமாக குளிரூட்டப்பட்ட இந்த உணவகத்தில் நான்கு பேர் அமர்வதற்காக அடுத்தடுத்து தடுப்பு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அருமை. மொத்தமாக அமர்வதற்கான வசதியும் தனியே உள்ளது.

சாப்பிட வாங்க!

நான்கு பேர் அமர்வதற்கான டேபிளில் வாழை இலை போன்ற வடிவத்துடன் உள்ள எவர்சில்வர் தட்டின் மேல், வாழை இலையை விரித்து உணவு வகைகளைப் பரிமாறுகிறார்கள். டேபிளில் ஆந்திர உணவுக்கே உரித்தான பருப்புப்பொடி மற்றும் நான்கு வகையான ஊறுகாய்கள் தவறாமல் இடம்பிடித்திருக்கின்றன.

சூடான சாதத்தில் ஆந்திரா பருப்புப் பொடியைக் கலந்து, நெய்யை ஊற்றி பிசைந்து சாப்பிடும் சுகமே சுகம்தான். கீரைக் கூட்டு, கத்திரி வறுவல், புடலைப் பொரியல், பீர்க்கங்காய் துவையல் ஓகே. ஆனால், சைட் டிஷ் அயிட்டங்களின் கூடுதல் காரம் அடிக்கடி தண்ணீர் டம்ளரைத் தேட வைக்கிறது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கேட்டால், ''ஆந்திர அயிட்டங்கள் கண்ணீரை வரவழைக்கும் காரத்துடன்தான் இருக்கும்'' என்றார் பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்தவர் (ரெகுலர் வாடிக்கையாளர் போல).

சாப்பிட வாங்க!

மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்று பலவகைகள் பரிமாறப்பட்டாலும்... அதீத காரம், அதன் ருசியைத் தடுக்கிறது. சாப்பிடும் இலையின் அமைப்பு தட்டின் மேல் சற்றே குவிந்த நிலையில் இருப்பதால், தாராளமாக ஊற்றி சாப்பிடும் ரசத்தையும், தயிரையும் கீழே வழியாமல் கட்டுப்படுத்துகிறது.

சாப்பிட்டு முடித்து கை கழுவி டேபிளுக்குத் திரும்பினால்... ஜிலேபி, வாழைப்பழம், பீடா என சின்ன தட்டில் தயாராக வைத்திருக்கிறார்கள். வழக்கமாக, சாப்பிட்டு முடிந்த பிறகு ஃப்ரூட்ஸ், ஐஸ்கிரீம் வகைகளை தேடுபவர்களுக்கு... தனியாக ஐஸ்கிரீம் ஷாப் வைத்திருக்கிறார்கள்!

மொத்தத்தில், ஆந்திரக்காரர்களுக்கும், காரப் பிரியர்களுக்கும் 'அமராவதி’ ஓகே!

சுவைப்போம்...

படங்கள்: எம்.உசேன்

ரெவ்யூ டீமில் இந்த முறை இடம் பெற்றவர்கள் சென்னையைச் சேர்ந்த வாசகிகளான காயத்ரி சுந்தர், சுமதி, வள்ளிமயில். அவர்களின் சுவையில்...

சாப்பிட வாங்க!

காயத்ரி சுந்தர் (இல்லத்தரசி): ''மாறுதலுக்காக மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சுவைத்தேன். மட்டன் பீஸ் பெரிய அளவில் இருந்தாலும் மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது. பிரியாணிக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிட்ட நெத்திலி ஃப்ரையும் அருமை. மெனு கார்டைப் பார்த்து கொஞ்சம் குழம்பித்தான் ஆர்டர் செய்ய வேண்டியிருக்கிறது. ஆர்டர் எடுப்பவர், 'இந்த அயிட்டம் நல்லாயிருக்கும்’ என்று எடுத்துச் சொன்னால்... வழக்கமாக சாப்பிடும் அயிட்டத்தைத் தவிர்த்து புதிதாக டேஸ்ட் செய்ய வசதியாக இருக்கும்.''

சுமதி (இல்லத்தரசி): ''என் கல்யாண விருந்துக்காக 20 வருடங்களுக்கு முன் முதன் முதலாக இந்த ஹோட்டலுக்கு வந்தேன். பிறகு அடிக்கடி வந்தாலும்... முன்பிருந்த சுவை படிப்படியாக குறைவதை உணர்கிறேன். ஆனால், நான் விரும்பிச் சாப்பிடும் பரோட்டா, சைட் டிஷ் சுவை மட்டும் மாறவில்லை. சர்வீஸ் சுத்தமாக சரியில்லை. எட்டு டேபிளுக்கும் ஆர்டர் எடுக்க, மூன்று, நான்கு பேர்தான் இருக்கிறார்கள். மதிய உணவு மற்றும் கூடவே ஆர்டர் செய்யும் உணவு வகைகளின் கட்டணம் கொஞ்சம் அதிகமே!''  

வள்ளிமயில் (மகளிர் விடுதி உரிமையாளர்): ''அசைவ உணவகத்தில் சைவ உணவு சாப்பிடப் போகிறோம்... எப்படி இருக்குமோ என்று நினைத்தேன். சூப்பராகவே இருந்தது. கீரைக்கூட்டு, கத்திரிக்காய் ஃப்ரை, தயிர் ரொம்ப சுவையாக இருந்தது. துவையல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அப்பளத்துக்கு பதில் வடகம் தந்தது வித்தியாச டேஸ்ட். அடுத்த அயிட்டமே டேபிளுக்கு வந்துவிடுகிறது... ஆனால், ஏற்கெனவே சாப்பிட்ட பிளேட்டை எடுக்கத்தான் அத்தனை சீக்கிரத்தில் ஆள் வரமாட்டேன்கிறார்கள்.''

சாப்பிட வாங்க!