Published:Updated:

மக்காச்சோள பர்ஃபி... மாம்பழ புளிசேரி!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

மக்காச்சோள பர்ஃபி... மாம்பழ புளிசேரி!

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

Published:Updated:

படங்கள்: எம்.உசேன்                                                       ஒவ்வொன்றுக்கும் பரிசு:

மக்காச்சோள பர்ஃபி... மாம்பழ புளிசேரி!

125

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

மக்காச்சோள பர்ஃபி

தேவையானவை: பச்சை மக்காச் சோளம் - 2 கப், பால் - 8 கப், நெய் - 2 டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், முந்திரி - 10, உலர்ந்த திராட்சை - 10.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் மக்காச்சோளத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து சூடாக்கி, சுண்டவிடவும். மக்காச்சோளத்தை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்துக் கிளறவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை  சேர்த்து மேலும் கிளறி இறக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இந்தக் கலவையைக் கொட்டி கரண்டியால் சமன் செய்யவும். ஆறிய பிறகு, கத்தி அல்லது தோசைத் திருப்பியால் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு எடுத்து வைக்கவும். இது... பண்டிகை, விருந்து போன்ற விசேஷங்களுக்கு ஏற்றது.

- பிரேமா சாந்தாராம், சென்னை-110

மக்காச்சோள பர்ஃபி... மாம்பழ புளிசேரி!

மாம்பழ புளிசேரி

தேவையானவை: பெரிய மாம்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - 2 கப், தேங்காய் - அரை மூடி, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, சீரகம் - அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

மக்காச்சோள பர்ஃபி... மாம்பழ புளிசேரி!

செய்முறை: தேங்காயைத் துருவி... அதோடு சீரகம், சிறிதளவு தயிர், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் விட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் சற்று கெட்டியாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை விழுது, உப்பு, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நுரைத்து வரும்போது மீதமுள்ள தயிரை ஊற்றிக் கிளறி இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி கலந்தால்... மாம்பழ புளிசேரி ரெடி.

- ஜெயலட்சுமி கோபாலன், சிட்லபாக்கம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்.

மக்காச்சோள பர்பி: நெய்யில் வறுத்த மைதா சிறிதளவு சேர்த்து தயாரித்தால், இன்னும் அசத்தலான ருசி கிடைக்கும்.

மாம்பழ புளிசேரி: தயிருக்குப் பதிலாக மில்க் க்ரீம் சேர்த்தால், மேலும் சுவையாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism