ஊட்டச் சத்துக்கள் பலவற்றை தன்னகத்தே கொண்ட சோயாவின் பயன்பாடு சமீப காலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது. சோயா சங்க்ஸ் மற்றும் சோயா கிரானுல்ஸ் ஆகியவற்றைக் கொண்டு விதம்விதமான, நாக்குக்கு ருசியான பல ரெசிபிகளை வாரி வழங்கும் புதிய பகுதி இது. இந்த இதழில் சோயா சங்க்ஸ் ஸ்வீட் பணியாரம் மற்றும் சோயா கிரானுல்ஸ் மசாலா சப்ஜி ஆகிய இரண்டு ரெசிபிகளுடன் களம் இறங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

சோயா சங்ஸ் ஸ்வீட் பணியாரம்

தேவையானவை: வேக வைத்து துருவிய சோயா உருண்டைகள் - 10, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லம் - கால் கிலோ (பாகு காய்ச்சி, வடிகட்டி கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி - 6 (பொடியாக நறுக்கவும்), புழுங்கலரிசி - ஒரு கப் (200 கிராம்), பச்சரிசி - ஒரு கப் (200 கிராம்), உளுந்து - ஒரு கைப்பிடி அளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் துருவிய சோயா, தேங்காய் துருவல், வெல்லப் பாகு, ஏலக்காய்த்தூள், உப்பு, முந்திரி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

குழிப்பணியாரக் கல்லை காய வைத்து, குழிகளில் நன்கு நெய் தடவி, காய்ந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் திருப்பிப் போட்டு பணியாரங்களை நன்கு வேக வைத்து எடுக்கவும்.

சூடாக சாப்பிட்டால்... மேலும் மேலும் சுவைக்கத் தூண்டும் இந்தப் பணியாரம்.

சோயா கிரானுல்ஸ் மசாலா சப்ஜி

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - இரண்டு, வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), தக்காளி - 3 (அரைத்துக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4, பச்சை மிளகாய் - 2, பட்டை - சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சோயா கிரானுல்ஸ் உடன் மசித்த உருளை, சிறிதளவு உப்பு, சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் (பிசையும் சமயம் கலவை சற்று தளர்வாக இருந்தால், சோள மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு சிறிது சேர்த்து கொண்டு உருண்டைகளாக்கவும்).

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி விழுது சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், தனியாத்தூள், மீதியிருக்கும் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தேவையான நீர் விட்டு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாகும் சமயம் பொரித்த உருண்டைகளைப் போடவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.