Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

சோயா கொண்டாட்டம்!

ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

ஊட்டச் சத்துக்களை வாரி வழங்கி, உடலுக்கு பலம் தரும் சோயாவில் ருசியான பல்வேறு உணவு வகைகளை செய்வதற்கான சமையல் குறிப்புகளை அள்ளித் தருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்...  சோயா சங்க்ஸ் பிரியாணி மற்றும் சோயா கிரானுல்ஸ் கட்லெட்.

சோயா சங்க்ஸ் பிரியாணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோயா கொண்டாட்டம்!

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், சோயா சங்ஸ் - அரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தயிர் - அரை கப், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லி, புதினா இலைகள் - மொத்தமாக ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கவும்) தேங்காய்ப்பால் - ஒரு கப், வறுத்த முந்திரி - 6, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை மிகவும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, பிழிந்தெடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் 2 முறை நன்கு பிசைந்து கழுவவும். கடாயில் சிறிது நெய் விட்டு அதை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

சோயா கொண்டாட்டம்!

குக்கரில் நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி... உப்பு, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி - புதினா இலைகள், வதக்கிய சோயா சங்க்ஸ் சேர்க்கவும். இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை நீர் வடித்து சேர்த்துக் கலக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டுமொரு முறை நன்கு கிளறி மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு (அடுப்பை 'சிம்’மில் வைத்து) 10 நிமிடம் கழித்து இறக்கி, வறுத்த முந்திரி தூவினால்... சூப்பர் சுவை, கமகம மணம் கொண்ட சோயா சங்க்ஸ் பிரியாணி தயார்.

இதற்கு வெங்காய தயிர் பச்சடி சரியான சைட் டிஷ்.

சோயா கிரானுல்ஸ் கட்லெட்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2,  சீஸ் - சிறிதளவு (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பிரெட் ஸ்லைஸ் - 4, மைதா - 4 டேபிள்ஸ்பூன், ரஸ்க் தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: சோயா கிரானுல்ஸை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு பிழிந்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நன்கு பிழிந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். மைதாவுடன் சிறிதளவு நீர் சேர்த்து சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும்.

பிரெட் ஸ்லைஸ்களை நீரில் நனைத்துப் பிழிந்து, அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், சோயா கிரானுல்ஸ். அரைத்த பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி, விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். இதனை மைதா கரைசலில் முக்கியெடுத்து ரஸ்க் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளைப் போட்டு பொரித்தெடுத்து சுடச்சுட தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

குழந்தைகளை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த கட்லெட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism