சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார் ஃபுட்ஸ்

##~##
சோயா கொண்டாட்டம்!

வயிற்றுப் பசிக்கு உணவு என்பதோடு நின்றுவிடாமல், சாப்பிடும்போது கலோரி, நியூட்ரிஷன் போன்றவற்றை கவனத்தில் கொள்வது சமீபத்திய டிரெண்ட். எனவேதான் உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் சோயாவை பயன்படுத்துவது மிகவும் அதிகரித்துள்ளது. சோயா சங்க்ஸ் மற்றும் சோயா கிரானுல்ஸைக் கொண்டு விதம் விதமான, வாய்க்கு ருசியான உணவு வகைகளை வாரி வழங்குகிறர் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா சங்க்ஸ் கீரை பொடிமாஸ், சோயா கிரனுல்ஸ் மில்க் ஸ்வீட்.

சோயா கிரானுல்ஸ் மில்க் ஸ்வீட்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ், பால், சர்க்கரை - தலா ஒரு கப், இனிப்பில்லாத கோவா - அரை கப், முந்திரி,  பாதாம் - தலா 6 (நீளமாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுக்கவும்), வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், நெய் - கால் கப்.

செய்முறை: சோயா கிரானுல்ஸை கொதி நீரில் இரண்டு நிமிடம் போட்டு பிழிந்தெடுத்து, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி நன்கு பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சோயா கொண்டாட்டம்!

அடிகனமான வாணலியில் பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அதில் சோயா கிரானுல்ஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். 5 நிமிடம் கழித்து கோவா,  வெனிலா எசன்ஸ் சேர்த்து மேலும் கிளறி, நெய் சேர்க்கவும். நன்கு சுருள வரும் சமயத்தில் இறக்கி... நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, மேலே பாதாம், முந்திரி தூவி, சிறிது ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

சோயா சங்ஸ் கீரை பொடிமாஸ்

தேவையானவை: சோயா சங்ஸ் - 10, சிறுகீரை - சிறிய கட்டு, சின்ன வெங்காயம் - பூண்டு பல் - தலா ஆறு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: சோயா சங்ஸை வேக வைத்து துருவவும். சிறுகீரையை ஆய்ந்து, தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் நறுக்கவும்.  

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு தாளித்து... சோயா துருவல், கீரை சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் தெளிக்கவும். கீரை வெந்ததும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு, இந்த கீரை பொடிமாஸை சேர்த்து பிசைந்து சாப்பிட... சுவை ஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்தான்!