Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

சோயா பொங்கல்... சூப்பர்!ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார்ஃபுட்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 'உடலில் சத்து சேர வேண்டும்... அதேசமயம் கொழுப்பும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு வரப்பிசாதமாக விளங்குவது சோயா. ஊட்டச் சத்துக்களின் அட்சயப் பாத்திரமாக விளங்கும் சோயாவை உணவில் சேர்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சோயா சங்க்ஸ் மற்றும் சோயா கிரானுல்ஸைக் கொண்டு சூப்பர் சுவையில், பல்வேறு உணவு வகைகளை வழங்கி வருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறுபவை... சோயா சங்க்ஸ் மஞ்சூரியன் மற்றும் சோயா கிரானுல்ஸ் இனிப்பு பொங்கல்.

சோயா கொண்டாட்டம்!

சோயா கிரானுல்ஸ் இனிப்பு பொங்கல்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ் பூன், பால் - அரை லிட்டர்,  பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், நெய்யில் வறுத்த முந்திரி - 8 (ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்), ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சோயா கிரானுல்ஸை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து வைக்கவும்.

பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் பாசிப்பருப்பை சேர்த்து வேகவிடவும். பிறகு அதனுடன் சோயா கிரானுல்ஸை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.

சோயா கொண்டாட்டம்!

சோயா கிரானுல்ஸும், பாசிபருப்பும் சேர்ந்து குழைந்து வெந்தபின் வெல்லக் கரைசலை சேர்க்கவும் (பொடித்த வெல்லத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வெல்லம் கரைந்த உடன் இறக்கி வடிகட்டிக் கொண்டால்... வெல்லக் கரைசல் தயார்). எல்லாம் சேர்ந்து வரும் சமயம் நெய் மற்றும் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

அழகிய பவுலில் இனிப்பு பொங்கல் வைத்து, ஸ்பூன் போட்டு கொடுக்க... குழந்தைகள் 'வாவ்!’ என்று பாராட்டியபடியே சாப்பிடுவார்கள்.

சோயா சங்ஸ் மஞ்சூரியன்

தேவையானவை: சோயா சங்ஸ் - 100 கிராம், மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு - தலா கால் கப், பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 6 பல், குடமிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, சிவப்பு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோயா சங்ஸை வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி வைக்கவும். மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், ஃபுட் கலர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். அலசி வைத்த சோயாவைப் பிழிந்து, இதனுடன் சேர்த்து நன்கு பிசிறவும் (சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய சோயாவைப் போட்டு பொரித்தெடுத்து வைக்கவும்.

மற்றொரு வாணலி யில் சிறிதளவு எண் ணெய்விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாயை நன்கு வதக்கி, பொரித்த சோயா சாஸ் சேர்த்துக் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு பொரித்த சோயா சங்ஸை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பொடி யாக நறுக்கிய வெங் காயத் தாளை தூவ வும்.

ஹோட்டலில் கிடைப்பது போலவே, இதோ... நம் வீட்டிலும் சுவையான மஞ்சூரியன் டிஷ் ரெடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு