Published:Updated:

வாசகிகள் கைமணம்

படங்கள்: பொன்.காசிராஜன்ஃபுட்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

வாசகிகள் கைமணம்

125

நூடுல்ஸ் பாயசம்

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பால் - 2 கப்,  தேங்காய் துருவல் - அரை கப், வெல்லம் - ஒரு கப், ஏலக்காய் - 4, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: ஒன்றரை கப் நீரை சூடாக்கி, அதில் நெய்யை விடவும். பிறகு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டைக்கு கிளறுவது போல கிளறி ஆறவிடவும்.

தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைக்கவும். பாலை கொதிக்க விட்டு அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, தேன் குழல் அச்சில் போட்டு, கொதிக்கும் பாலில் பிழிந்து கிளறி இறக்கவும் (அதிகம் கிளற வேண்டாம்).

- விஜயலட்சுமி, பெங்களூரு

வாசகிகள் கைமணம்

தால் வித் பொட்டேடோ பால்ஸ்

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, ரவை - தலா ஒரு சிறிய கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்

செய்முறை: பருப்பு வகைகளுடன், காய்ந்த மிளகாய், பச்சரிசி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். ரவையை கால் மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, அப்படியே சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயை காய வைத்து, இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

- எஸ்.கிருஷ்ணகுமாரி சுவாமிநாதன், சென்னை-37

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து. ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

நூடுல்ஸ் பாயசம்: சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்து செய்தால்... மேலும் சுவையாக இருக்கும்.

தால் வித் பொட்டேடோ பால்ஸ்: மாவில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து தயாரித்தால், சாப்ஃட்டாக வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு