Published:Updated:

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

சாப்பிட வாங்க!

ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

'சாப்பிட வாங்க' பகுதிக்காக இம்முறை, தமிழகத்தின் மையப்புள்ளியான திருச்சி மாநகருக்கு பயணித்தது... 'அவள் விகடன்' ரெவ்யூ டீம்! ஆரம்ப காலத்திலிருந்து அவள் விகடனுடன் நெருக்கமாக இருக்கும் திருச்சியைச் சேர்ந்த வாசகி ஷகிதா பேகம், ''ஹோட்டல் ராஜா கார்டனுக்கு சாப்பிட வாங்க'’ என்று பரிந்துரைத்திருந்தார். ரெவ்யூ டீமில் அவருடன் திருச்சியைச் சேர்ந்த ரெஜி ஏஞ்சல் மற்றும் க்ளோரி ஷீபா ஆகிய வாசகிகளையும் இணைத்துக் கொண்டோம்.

ரயில் ஜங்ஷன் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டுக்கும் நடுவில் அமைந்து இருப்பது... ராஜா கார்டன் உணவகத்தின் ப்ளஸ் பாயின்ட். குடும்பத்துடன் 'கெட் டுகெதர்’ போக நினைக்கும் பலருடைய தேர்வு... ராஜா கார்டன்தான்.

ஹோட்டலின் ஸ்பெஷல்... பிரியாணி வகைகளை முதலில் ஆர்டர் செய்தோம். அதையடுத்து... லெமன் பெப்பர் சிக்கன், ஃபிரெஞ்சு பெப்பர் ஃப்ரை, ஃபிஷ் ஃப்ரை 65, சிக்கன் தந்தூரி என வரிசையாக வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி ருசியுடன் வாய்க்குச் சுவையாக இருந்ததோடு... வயிற்றைக் கெடுக்காது என்பதையும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தன. விலை குறைவாக இருப்பதும்... உணவுகளும் தரம் மற்றும் சுவையுடன் இருப்பதும்... குறிப்பிட வேண்டிய விஷயம்!

சாப்பிட வாங்க!

'மெனு கார்டு' என்ற ஒன்று இந்த ஹோட்டலில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல்... நமக்கு என்ன பிடிக்கும், அங்கு என்ன நன்றாக இருக்கும் என்பதையெல்லாம், பரிமாறுபவர்களே முன்வந்து தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள். ஆர்வத்துடன் கேட்டால், ரெசிபிகளையும் அள்ளிவிடுகிறார் டேபிள் மேனேஜர்.

சாப்பிட வாங்க!

''பொதுவாக ஓட்டல்களில் மொத்தமாக பிரியாணியைத் தயாரித்துவிடுவார்கள். பிறகு சிக்கனோ, மட்டனோ கலந்து கேட்பவர்களின் விருப்பப்படி கொடுப்பார்கள். நாங்களோ... சிக்கன், மட்டன், மொகல், இறால் என பலவகை பிரியாணிகள் செய்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அரிசி, தனித்தனிப் பாத்திரங்களில் செய்கிறோம். சாப்பிடும்போது அதை நீங்களே உணர்ந்திருக்க முடியும். பிரியாணியை விறகு அடுப்பில்தான் சமைப்போம். அதுவும் புளியம் விறகு மட்டும்தான் பயன்படுத்துவோம். பிரியாணி வெந்ததும் குண்டானை பெரிய மூடி போட்டு மூடி, அடுப்பு தணலை எடுத்து, மூடி மீது பரப்பி 'தம்’ போட்டுவிடுவோம். அப்போதுதான் அடியில் வெந்து இருப்பதைப் போல மேல் பாகமும் நன்றாக வெந்து, பிரியாணி ருசியாக இருக்கும்'' என்று டேஸ்ட்டுக்கான டிப்ஸையும் தந்தனர்.

- சுவைப்போம்...

படங்கள்: தே.தீட்ஷித்

சாப்பிட வாங்க!

வாசகிகளின் கமென்ட்ஸ்...

ரெஜி ஏஞ்சல், (தனியார் மருத்துவமனை செகரெட்டரி): நாற்பது வருடங்களாகச் செயல்பட்டு வருவதால், அதன் பாரம்பரியம் ருசியில் தெரிகிறது. மதிய நேரம் என்றாலும், கார்டன் என்பதால் ஏ.சி இல்லாமலேயே குளுமையாக உட்கார்ந்து சாப்பிட முடிகிறது. அதேசமயம், ஓபன் ஸ்பேஸ் என்பதால் ஈ தொல்லை இருக்கிறது.

ஷகிதா பேகம், (இல்லத்தரசி): பிரியாணியை விறகடுப்பில், அதுவும் புளிய மரத்தின் விறகில்தான் சமைப்பதாகச் சொல்கிறார்கள். புதுச்செய்தியாக இருக்கிறது. சிம்பிள் பட்ஜெட், டேஸ்ட்டி ஃபுட் என வேண்டுபவர் குடும்பத்தினருடன் தைரியமாக இங்கே வந்து சாப்பிடலாம். பார்க்கிங், குழந்தைகளுக்கு பிளே ஏரியா என எல்லாமே இருக்கிறது. சுவைத்த அயிட்டங்களில் ஃபிரெஞ்சு பெப்பர் ஃப்ரைக்கு என் ஓட்டு.

க்ளோரி ஷீபா (தனியார் மருத்துவமனை நர்ஸ்): பிரியாணி வகைகள் அனைத்தும் ருசியாக இருந்தன. லெமன் பெப்பர் சிக்கன் சூப்பர். புலாவ், கொஞ்சம் புளிப்பாக இருந்ததைக் குட்டிக் காட்டியே ஆகவேண்டும்.