Published:Updated:

சோயா கொண்டாட்டம்!

மயக்குதே... மசாலா கிரேவி! ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார்ஃபுட்ஸ்

சோயா கொண்டாட்டம்!

மயக்குதே... மசாலா கிரேவி! ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார்ஃபுட்ஸ்

Published:Updated:
##~##
சோயா கொண்டாட்டம்!

டல் ஆரோக்கியம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்... உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வாரி வழங்குவதுடன், கொழுப்புச் சத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சோயா, மக்களின் மனதைக் கவர்ந்து, மேலும் மேலும்  அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி தனிச் சிறப்பு மிக்கதாக விளங்கும் சோயாவில் சுவையான பல உணவு வகைகளை, வித்தியாசமான சிந்தனையுடன் அள்ளித் தருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். இந்த இதழில் இடம்பெறும் ரெசிபிகள்... சோயா சங்ஸ் காய்கறி - தயிர் மசாலா மற்றும் சோயா கிரானுல்ஸ் ஸ்வீட் பால்.

சோயா கிரானுல்ஸ் ஸ்வீட் பால்

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், கோகோ பவுடர் - முக்கால் டேபிள்ஸ்பூன், பூஸ்ட் (அ) போர்ன்விட்டா - ஒரு டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - அரை கப், பிரெட் ஸ்லைஸ் - இரண்டு, நெய் - சிறிதளவு.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து எடுக்கவும். பிரெட் ஸ்லைஸையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சோயா கிரானுல்ஸை சிறிது நெய் விட்டுப் பிசிறி, வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் கோகோ பவுடர், பொடித்த பிரெட், பொடித்த சர்க்கரை, பூஸ்ட் (அ) போர்ன்விட்டா, மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும் (வேண்டுமானால், கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டை பிடிக்கலாம்).

இந்த இனிப்பு உருண்டையை குட்டீஸ் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்.

சோயா சங்ஸ் காய்கறி  தயிர் மசாலா

தேவையானவை: சோயா சங்ஸ் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, தயிர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப), தனியா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (அ) மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சோயா கொண்டாட்டம்!

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சோயா சங்ஸை வெந்நீரில் 5 நிமிடம் வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, ஃபோர்க் மூலம் ஆங்காங்கே குத்தி, உப்பு சேர்த்து தயிரில் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தயிரில் ஊறிய சோயா சங்ஸை சேர்த்து, கொதி வந்ததும் மிக்ஸியில் பொடித்த பொடியைச் சேர்த்து, மேலும் ஒரு கொதி விட்டு இறக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம்). பிறகு, மல்லித்தழை (அ) வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுக்கு ஏற்ற ஜோடியான இந்த மசாலா கிரேவி, சாப்பிடுபவர்களை 'சபாஷ்’ போட வைக்கும்!