Published:Updated:

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

Published:Updated:

தயிர் ரொட்டி

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

தேவையானவை: மைதா மாவு, நெய், தயிர் - தலா ஒரு கப், சர்க்கரை (ஜீனி) - 2 கப், ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை: மைதா மாவை நன்றாக சலித்து... நெய், தயிர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) சிறிது ஊறியதும், ரொட்டி போல் இட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். சர்க்கரையில் முக்கால் கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி... ஒரு கம்பிப்பாகு பதம் வந்ததும் இறக்கவும். சுட்டு வைத்திருக்கும் ரொட்டிகளைத் துண்டு துண்டாக வெட்டி, சர்க்கரைப்பாகில் போட்டு ரோஸ் வாட்டரை விட்டு ஊறியதும் சாப்பிடலாம்.

-வி.பத்மாவதி, அரியலூர்

பனீர்- பேரீச்சம்பழ ஸ்வீட்

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

தேவையானவை: ஃப்ரெஷ் பனீர், பேரீச்சம்பழம் - தலா ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, பொடித்த சர்க்கரை (ஜீனி), பால் பவுடர் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். இதில் துருவிய பனீரை சேர்த்துப் பிசையவும். கடாயை காய வைத்து, நெய் விட்டு, பிசைந்து வைத்துள்ளவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும், பால் பவுடர், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை சிறிய உருண்டைகளாக பிடித்து, வறுத்த முந்திரியை மேலே பதித்து, தட்டில் அடுக்கவும்.

- லட்சுமி சந்தானம், ஸ்ரீரங்கம்


நொய் புளியோதரை

டாப்பா இருக்குது...தயிர் ரொட்டி !

தேவையானவை: அரிசி நொய் (குருணை) - 2 கப், கெட்டியான புளிக் கரைசல் - அரை கப், வெல்லம் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை,  பெருங்காயம் - சிறிதளவு, வேர்க்கடலை - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3, மிளகு, வெந்தயம் - தலா 10, தனியா - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், சுக்கு - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நொய்யை கழுவி, கல் இல்லாமல் அலசவும். அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வேர்க்கடலை, மஞ்சள்தூள் போட்டு தாளிக்கவும். வெல்லம், உப்பு, புளிக் கரைசலை சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தளதளவென்று கொதித்ததும், நொய் சேர்த்து மூடவும். நொய் முக்கால் பதம் வெந்ததும், அடுப்பை சிம்மில் வைக்கவும். பொடித்து வைத்துள்ள மசாலாத்தூளை,  நொய் கலவையில் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் முழுவதும் வற்றி பதமானதும், இறக்கி மூடிவைக்கவும்.

இதை சிப்ஸ், அப்பளம், இனிப்பு தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

- பிரேமா ராவ், ஸ்ரீரங்கம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

தயிர் ரொட்டி: சூடான தண்ணீரில் அரை டீஸ்பூன் ஈஸ்ட் கலந்து செய்தால், ரொட்டி மிருதுவாக இருக்கும்.

பனீர்-பேரீச்சம்பழ ஸ்வீட்: ஒரு டீஸ்பூன் கசகசாவை வறுத்து சேர்த்தால், டேஸ்ட் அருமையாக இருக்கும்.

நொய் புளியோதரை: வறுத்துப் பொடிக்கும்போது, ஒன்றரை டீஸ்பூன் எள் சேர்த்துக் கலந்து செய்தால், வாசனையாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism