Published:Updated:

கோகனட் பர்ஃபி பேஷ்... பேஷ்!

வாசகிகள் கைமணம், படம்: பொன்.காசிராஜன்

கோகனட் பர்ஃபி பேஷ்... பேஷ்!

வாசகிகள் கைமணம், படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கோகனட் பர்ஃபி பேஷ்... பேஷ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

125

பனீர்  கோகனட் பர்ஃபி

தேவையானவை: பனீர் - ஒரு கப், துருவிய கொப்பரைத் தேங்காய் - அரை கப், நெய் - தேவையான அளவு, சர்க்கரை - அரை கப், பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை  - தேவையான அளவு, பால் - அரை கப்.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி, சூடானவுடன் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் (திராட்சையை வறுக்க வேண்டாம்). அதே வாணலியில் துருவிய தேங்காயைப் போட்டு லேசாக வதக்கி, அதனுடன் துருவிய பனீரைப் போட்டு வதக்கவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து, கரைந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கெட்டியாகும் வரை கலக்கிக்கொண்டே இருக்கவும். இதனுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை சேர்க்கவும். அகலமான தட்டில் நெய்யை பரவலாகத் தடவி, அதில் இந்தக் கலவையை கொட்டி பரப்பவும். நன்றாக ஆறியதும் விரும்பிய வடிவத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம்.

- பிரேமா சாந்தாராம், சென்னை-110

கோகனட் பர்ஃபி பேஷ்... பேஷ்!

முளைகட்டிய வெந்தய குழம்பு

தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - அரை கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி  2, பூண்டு பல் - கால் கப், புளி - சிறு எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன், வெல்லத்தூள், தனியாத் தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

அரைப்பதற்கு: தேங்காய் துருவல் - அரை கப், சோம்பு அல்லது சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பூண்டு - 3 பல்.

தாளிப்பதற்கு: நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கறிவடகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.

கோகனட் பர்ஃபி பேஷ்... பேஷ்!

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பவற்றைத் தாளித்து, முளைகட்டிய வெந்தயம் சேர்த்து வாசனை வர வதக்கவும். பிறகு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,    மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி... புளிக் கரை சல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக் கும் தேங்காய் விழுது சேர்த்து, தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் இறக்கி... வெல்லத்தூள், கறிவேப்பிலை போட்டுக் கலக்கவும்.

இந்தக் குழம்பின் சுவையும், மணம் அபாரமாக இருக்கும். சின்ன வெங்காயமும், வெந்தயமும் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடியவை.

- நா.ராஜேஸ்வரி, மும்பை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

பனீர் - கோகனட் பர்ஃபி: சிறிதளவு முந்திரியை தனியாக ஊற வைத்து, அரைத்து சேர்த்து தயாரித்தால், மேலும் அற்புதமான சுவை கிடைக்கும்.

முளைகட்டிய வெந்தய குழம்பு: முளைகட்டிய வெந்தயத்தை ஊற வைத்து, துவரம் பருப்புடன் சேர்த்து வேக வைத்து சாம்பாராகவும் செய்யலாம்.