ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

கலக்கலான கார்ன் கச்சோரி!

வாசகிகள் கைமணம்படங்கள்: ஜெ.வேங்கடராஜ் ஃபுட்ஸ்

##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கலக்கலான கார்ன் கச்சோரி!

125

ஜாமூன் மஞ்சூரியன்

தேவையானவை: குலோப் ஜாமூன் மிக்ஸ் - இரண்டு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி சாஸ், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குலோப் ஜாமூன் மிக்ஸ், 2 டீஸ்பூன் பச்சை மிளகாய், ஒரு கரண்டி அளவு வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, ஒரு டீஸ்பூன் பூண்டு, உப்பு எல்லாவற்றையும் கலந்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். அதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் மீதியுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, சில்லி மற்றும் சோயா சாஸ் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சோள மாவை அரை கப் பால் அல்லது தண்ணீரில் கரைத்து சேர்த்து, லேசாக கெட்டியானதும் இறக்கவும். பரிமாறும்போது பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளைச் சேர்க்கவும். 

- ஆர்.வசந்தி, போளூர்

கலக்கலான கார்ன் கச்சோரி!

கார்ன்  சீஸ் கச்சோரி

தேவையானவை: மைதா - ஒரு கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், சீஸ் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - அரை மூடி, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாவுடன் உப்பு, சிறிதளவு எண்ணெய், தேவையான நீர் விட்டு நன்றாக அடித்துப் பிசைந்து, ஊறவிடவும். ஸ்வீட் கார்ன் முத்துக்களை கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், அரைத்த  கார்ன் சேர்த்து வதக்கவும். உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இறக்கி ஆறவிடவும். சீஸை துருவி இதனுடன் சேர்க்கவும்.

கலக்கலான கார்ன் கச்சோரி!

மைதாவை சிறு பூரிகளாக திரட்டி, சோள கலவையை வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்.

அவருடைய கமென்ட்ஸ்...

ஜாமூன் மஞ்சூரியன்: ஜாமூன் மிக்ஸ் இல்லாவிட்டால், ஒரு கப் பால் பவுடர், அரை கப் மைதாவை சேர்த்து பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.

கார்ன் - சீஸ் கச்சோரி: ஸ்வீட் கார்னுக்கு பதில், ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலையை வைத்தும் தயாரிக்கலாம்.