Published:Updated:

சோயா சாலட்... சூப்பர் சக்தி!

சோயா கொண்டாட்டம்!ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார்ஃபுட்ஸ்

சோயா சாலட்... சூப்பர் சக்தி!

சோயா கொண்டாட்டம்!ஆதிரை வேணுகோபால், படங்கள்: ஆ.முத்துக்குமார்ஃபுட்ஸ்

Published:Updated:
##~##

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய பரபரப்பான உலகில், சமையல் செய்வதற்கு ஒதுக்க முடிந்த  நேரத்தில் சத்தான சாப்பாடு தயாரிப்பது என்பது பலருக்கும் சவால்தான். அதேசமயம், நமது ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தானே ஓடியாடி உழைக்க முடியும். இந்த சவாலை சமாளிக்கும் விதத்தில்... சுவையான, சத்துமிக்க உணவை சுலபமாக செய்து பரிமாற உதவுவதற்காக, ஊட்டச் சத்துக்களின் உறைவிடமான சோயாவில் பலவித உணவு வகைகளை இந்தப் பகுதியில் அளித்து வருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

இந்த இதழில் இடம் பெறும் ரெசிபிகள் சோயா சங்க்ஸ் நியூட்ரி சாலட், சோயா கிரானுல்ஸ் வெஜிடபிள் கொத்து பரோட்டா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோயா சங்ஸ் நியூட்ரி சாலட்

தேவையானவை: சோயா சங்ஸ் - ஒரு கப், ஆப்பிள் - 3, வறுத்த வேர்க்கடலை - அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித் தழை - சிறிதளவு, ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகுப்பொடி - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய செலரி கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை கப், உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்.

சோயா சாலட்... சூப்பர் சக்தி!

சோயா சங்ஸை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து, இரண்டிரண்டாக நறுக்கவும். இதனுடன் வேர்க்கடலை, ஆப்பிள் துண்டுகள், செலரி கீரையைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் ஆலிவ் ஆயில், வினிகர், உப்பு, மிளகுத்தூள், கடுகுப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதனை சோயா சங்ஸ் கலவையில் ஊற்றி, நன்றாக குலுக்கி கலக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

சோர்வு நீக்கி, உடனடி எனர்ஜி தரும் அருமையான சாலட் இது!

சோயா கிரானுல்ஸ் வெஜிடபிள் கொத்து பரோட்டா

தேவையானவை: சோயா கிரானுல்ஸ் - ஒரு கப், பரோட்டா - 6, வெங்காயம் - 2, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், மைதா - அரை கப், கார்ன்ஃப்ளார் - முக்கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுப் பல் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பரோட்டாவை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சோயா கிரானுல்ஸை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி வைக்கவும்.

சோயா சாலட்... சூப்பர் சக்தி!

மைதா மாவுடன் அரை கப் கார்ன்ஃப்ளார், உப்பு, ஃபுட் கலர், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவில் பரோட்டா துண்டுகளைத் தோய்த்தெடுத்து, சூடான எண்ணெயில்  பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங் காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள் ஆகிய வற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சோயா கிரானுல்ஸ், பொரித்த பரோட்டா துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு மீதமுள்ள கால் கப் கார்ன்ஃப்ளாரை சிறிது நீரில் கரைத்து அதனுடன் சேர்த்து நன்கு கிளறி சுடச்சுட பரிமாறவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism