ரெசிப்பிஸ்

நினைத்தாலே நாவில் ஊறவைக்கும்..
30 வகை கட்லெட்!

பேரைச் சொன்னாலே போதும்.. நாக்கில் நீர் ஊற வைப்பது கட்லெட்! 'அதிலே இத்தனை வகைகளா?' என வியக்கும்படி ஒரு நீண்ட ரெசிபி பட்டியலையே எழுதி அனுப்பியிருந்-தார் சேலத்தைச் சேர்ந்த நம் வாசகி இராசலட்சுமி. அதிலிருந்து 23 ரெசிபிகளை தேர்ந்தெடுத்து, தானும் ஏழு ரெசிபிகளை சேர்த்து அவற்றை சுவைபட செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

வீட்டின் மாலை நேரங்களை மகிழ்ச்சியின் நேரங்களாக மாற்றுங்கள்!

அவல் கட்லெட்

தேவையானவை அவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, பச்சை பட்டாணி, சோள-மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்-கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து வைத்து, மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற விடவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.

இந்த கட்லெட்டுகளை கரைத்த சோளமாவில் தோய்த்து, அவலில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

பேபிகார்ன் கட்லெட்

தேவையானவை பேபிகார்ன் - அரை கிலோ, உருளைக்கிழங்கு, சோள மாவு, கடலை மாவு - தலா கால் கிலோ, கசகசா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - 2, சீரகம், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை பேபிகார்னை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், கசகசா, சீரகம், கொத்தமல்லி சேர்த்து நைஸாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து, சோள மாவு, கடலை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பேபிகார்ன் விழுது, மசித்த உருளைக்கிழங்கு கலவை, வதக்கிய மசாலா, உப்பு எல்லா-வற்றையும் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு, நன்கு பிசைந்து, கட்-லெட் செய்து கொள்ள-வும்.

கடாயில் எண் ணெய் விட்டு, காய்ந்-ததும் கட் லெட்டுகளை பொரித்தெடுக்க-வும்.

சட்னி, தக்காளி சாஸ் இதற்கு அருமை யான சைட் டிஷ்!

பீட்ரூட் கட்லெட்

தேவையானவை பீட்ரூட் - 3, உருளைக்கிழங்கு - அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சைமிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், காய்ந்த மாங்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன், பிரெட் தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை பீட்ரூட்டை 7 நிமிடம் வேகவைத்து எடுத்து, தோலுரித்துக் கொள்ளவும். அதன் ஈரப்பதம் உலர்ந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்-கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசித்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்-ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை-மிளகாய், சோம்பு, தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும். பிறகு, பீட்ரூட்டை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். சிறிது வதங்கியதும் காய்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

ஆறியதும் விரும்பிய வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் கட்லெட்டை போட்டு, இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

ஸ்டீம்டு வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை புழுங்கலரிசி - ஒரு டம்ளர், காய்ந்த மிளகாய் - 3. பெருங்காயம் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், முருங்கைக்கீரை, துருவிய கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை பட்டாணி - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை புழுங்கலரிசியை 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து, களைந்து நீரை வடித்து விடவும். இதனுடன் உப்பு, பெருங்-காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்-ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை பட்டாணி, காய்கறி-கள், கீரை, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

அரைத்து வைத்துள்ள புழுங்கலரிசி மாவில் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மாவை கொட்டிக் கிளறி, கெட்டியானதும் இறக்கவும். இந்த மாவு ஆறியதும், இதனுடன் வதக்கிய காய்கறி கலவையை சேர்த்து, கிளறி தட்டில் வைத்து இட்லி போல் வேக விட்டு எடுத்து, துண்டுகள் போடவும். எண்ணெய் இல்லாத கட்லெட் இது.

வாழைப்பூ கட்லெட்

தேவையானவை ஆய்ந்த வாழைப்பூ, கடலைப்பருப்பு - தலா 2 கப், துருவிய பனீர் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, ஓமம் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை வாழைப்-பூவில் மஞ்சள்தூள் சேர்த்து, 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். கடலைப்-பருப்பை ஊறவைத்து அதில் ஓமம்,---காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த வாழைப்பூ, துருவிய பனீர், அரைத்த கடலைப்பருப்பு கலவை எல்லாவற்றையும் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் விட்டு, உருண்டைகளை தட்டிப் போட்டு மிதமான தீயில் இருபக்கமும் வேக விட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவர் கட்லெட்

தேவையானவை காலிஃப்ளவர் - 1, உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் - சிறிதளவு, சீரகம் - அரை டீஸ்பூன், பிரெட் தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை காலிஃப்ளவரை வெந்நீரில் உதிர்த்துப் போட்டு, உப்பு சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து, பிறகு பொடியாக நறுக்-கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு, சிறிது வதங்கியதும் மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிறகு, நறுக்கிய காலிஃப்ளவரை இதனுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்கி, சிறிது நேரம் மூடி வைக்கவும். வெந்த பிறகு மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

இந்தக் கலவையை நன்றாகப் பிசைந்து, உருண்டைகளாக்கி லேசாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

கோதுமை ரவை கட்லெட்

தேவையானவை சம்பா கோதுமை ரவை, நறுக்கிய வெங்காயம், சீஸ் துருவல், தேங்காய் துருவல், பிரெட் தூள் - தலா ஒரு கப், முந்திரி, சோயா உருண்டைகள் - தலா அரை கப், பச்சைமிளகாய் - 8, பொடித்த சர்க்கரை, கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், வேகவைத்த ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து கொள்ளவும். ரவையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிக் -கொள்ளவும். இதனுடன், சோயா உருண்டை, முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, சீஸ் துருவல், தேங்காய் துருவல், ஜவ்வரிசி சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். இதில் பொடித்த சர்க்கரை, கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து விருப்பமான வடிவில் கட்லெட்டுகளாக செய்து, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

ஜவ்வரிசி கட்லெட்

தேவையானவை ஜவ்வரிசி - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பச்சைமிளகாய் - 4, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், பிரெட் துண்டு - 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை ஜவ்வரிசியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கையால் உதிர்த்து, மாவு போல் வரும் வரை ஊற விடவும். பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு வதக்கி, ஜவ்வரிசி மாவு, மசாலாத்தூள் சேர்த்து கிளறவும். பூண்டை நசுக்கி சேர்க்கவும். பிரெட்டை உதிர்த்து போடவும். உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த மாவை சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் உருண்டைகளை லேசாக தட்டிப் போடவும். சிவக்க வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

கருணைக்கிழங்கு கட்லெட்

தேவையானவை கருணைக்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம் - 1, சோயா மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், முருங்கைக்கீரை - ஒரு பிடி, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கருணைக்கிழங்கை தோலுரித்து வேகவைத்து மசித்துக் கொள்-ளவும். வெங்காயத்தையும், முருங்கைக் கீரை யையும் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். அதில் வெங்காயம், பொடியாக நறுக்கிய முருங்கைக் கீரையையும் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிய வெங்காயக் கலவையை மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்குடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசையவும். சோயா மாவையும், அரிசி மாவையும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பிசைந்த கலவையை கட்லெட்டுகளாக செய்து, கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து தோசைக்கல்லில் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

கீரை கட்லெட்

தேவையானவை பொடியாக நறுக்கிய தண்டு கீரை-அரை கப், துவரம்பருப்பு - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 10, சோம்பு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.

இந்த கலவையோடு நறுக்கிய கீரையை சேர்த்துக் கலக்கவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து ஆவியில் வேகவிட்டு எடுத்து துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.

மேக்ரோனி கட்லெட்

தேவையானவை மேக்ரோனி, பால், பிரெட் தூள், நறுக்கிய உருளைக்கிழங்கு - தலா 2 கப், மைதா மாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, வெண்ணெய், துருவிய சீஸ் - தலா அரை கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேக்ரோனி, உப்பைப் போட்டு மிருதுவாக வரும் வரை வேக விடவும். அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு அடுப்பில் வைத்து உருக்கி, சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக போட்டு வறுக்கவும். பிறகு, பாலை தெளித்து கிளறி இறக்கவும். இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், துருவிய சீஸ், வேகவைத்த மேக்ரோனி சேர்த்து கலந்து நன்றாகப் பிசைந்து, விரும்பிய வடிவத்தில் செய்து பிரெட் தூளில் புரட்டவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட்டுகளை எண்ணெ-யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

முந்திரி கட்லெட்

தேவையானவை முந்திரி - இரண்டரை கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா கால் கிலோ, பச்சைமிளகாய் - 10, அவல் - அரை கப், சோம்பு, சோளமாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - கால் கப், எலுமிச்சைச் சாறு - சில துளிகள், கொத்தமல்லி - ஒரு கட்டு, இஞ்சி - ஒரு துண்டு, பிரெட் தூள் - ஒரு கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை முந்திரியை ஊறவைத்து வெண்ணெய் போல் நைஸாக அரைக்கவும். சோம்பையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அவலை ஊறவைத்து தண்ணீரை வடித்து விடவும்.

மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, வெங்காயம், முந்திரி விழுது, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும்.

சோளமாவை கரைத்து கொள்ளவும். செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

முத்து கட்லெட்

தேவையானவை ஜவ்வரிசி, ரவை, பிரெட் தூள் - தலா ஒரு கப், அவல் - அரை கப், உருளைக்கிழங்கு - 2, பிரெட் துண்டுகள் - 4, பெருங்காயத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை ஜவ்வரிசி, அவல், ரவையை தனித்தனியே 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ரவை ஊறியதும் தண்ணீரை இழுத்துக் கொண்டுவிடும்.

ஜவ்வரிசி, அவலை நன்றாகப் பிழிந்து ரவையோடு சேர்த்து வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, பிரெட் துண்டுகள், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசையவும். இதை விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்து, பிரெட் தூளில் புரட்டவும்.

தோசைக்கல்லை காய வைத்து, அதில் கட்லெட்டுகளைப் போட்டு, எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். இந்த கட்லெட்டில் ஜவ்வரிசி முத்து முத்தாகத் தெரிவது, பார்க்க அழகாக இருக்கும்.

முட்டைகோஸ் கட்லெட்

தேவையானவை முட்டைகோஸ் - அரை கிலோ, மைதாமாவு, கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒன்றரை கப், வெங்காயம் - 1, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை முட்டைகோஸ், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைதா மாவு, அரிசி மாவு, கடலை மாவு மூன்றையும் கலந்து கரம் மசாலாத் தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.

இதில் நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் செய்து, இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் வேகவிடவும். ஆறியதும் எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந் ததும் வெந்த கட்லெட்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

வேர்க்கடலை கட்லெட்

தேவையானவை காய்ந்த வேர்க்-கடலை - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, பிரெட் துண்டுகள் - 3, பச்சைமிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பிரெட் தூள் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். வேர்க்கடலையை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை விழுதாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்துப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்.

நூடுல்ஸ் கட்லெட்

தேவையானவை நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, பிரெட் தூள் - தலா கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, மைதா மாவு, சீஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 1, பூண்டு - 3 பல், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை நூடுல்ஸை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி லேசாக வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, வெந்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், பட்டாணி, உப்பு, வேகவைத்த நூடுல்ஸ் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். துருவிய சீஸ், நறுக்கிய கொத்தமல்லி, பச்சை பட்டாணியை சேர்த்துப் பிசைந்து கட்லெட்டுகளாக செய்து, பிரெட் தூள், மைதாவில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தொடர்ச்சி...