வாசகிகள் கைமணம்!

ஆவலை தூண்டுதே அவல் ரசமலாய்!

ஒவ்வொன்றுக்கும் பரிசுமூன்று ஜார்கள் கொண்டபட்டர்ஃப்ளை மிக்ஸர் கிரைண்டர்

அவல் ரசமலாய்
தேவையானவை அவல் - ஒரு கப், கோதுமை, ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, முந்திரி - தலா அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - கால் கிலோ, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை, பாதாம் எசென்ஸ் - 3 சொட்டு.

செய்முறை அவல், கோதுமை, ஜவ்வரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே பொன்னிறமாக வறுத்து, அரைத்து, சலித்து, பேக்கிங் பவுடரையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி ஒரு கம்பிப் பதம் வந்ததும் பாதாம் எசென்ஸை விடவும்.

அவல் கலவையில் நெய் விட்டு நன்றாகப் பிசைந்து, நீளவாக்கில் உருட்டி, சர்க்கரைப் பாகில் போட்டு வேக விடவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து விழுதாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, பாதியளவு சுண்டியதும் அரைத்த விழுதைச் சேர்த்து, அடி பிடிக்காமல் கிளறவும். பிறகு பாகில் வேக வைத்த ரசமலாய்களைப் போட்டு, நன்றாக ஊறியதும் எடுத்துப் பரிமாறவும்.

- ஜே.ஜாஸ்மின், திருப்பத்தூர்

பாசிப்பருப்பு பிரியாணி

தேவையானவை பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - அரை கப், பச்சைமிளகாய் - 5, பிரியாணி அரிசி - அரை கிலோ, பாசிப்பருப்பு - முக்கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா - ஒரு கப், எண்ணெய், நெய் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், தக்காளி - தலா ஒரு கப்.

செய்முறை பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் தண்ணீர் விட்டு அம்மியில் அரைத்து, தனியாக வைக்கவும். மிக்ஸியில் என்றால், முதலில் அரைத்து விட்டு பிறகு தண்ணீர் ஊற்றி கலக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து,

அரிசியில் கொட்டி ஊற விடவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் புதினா, கொத்தமல்லியைப் போட்டு சுருள வதக்க வும். நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு பெரிய வெங்காயம் பச்சைமிள காயைப் போட்டு வதக்கவும். அதனுடன் சிறிய வெங்கா யத்தைப் போட்டு வாசம் வரும் வரை வதக்கவும். கடைசியாக தக்காளியைப் போட்டு சுருள வதக்கி, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.எல் லாம் சேர்ந்து கறுப்பான கலவையாக மாறும்.

இப்போது தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அரிசி மற்றும் பருப்புத் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து, குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும், தீயை மிதமாக்கி 5 நிமிடம் வேக விடவும். ஓசை அடங்கியதும் குக்கரைத் திறந்து கிளறி விட்டுப் பரிமாறவும்.

- கிருத்திகா ஜெகதீஷ், திருச்சி

தயிர் பூரணப் பூரி

தேவையானவை கெட்டித் தயிர் - 2 கப், சர்க்கரை, மைதா மாவு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், கிஸ்மிஸ்பழம் - 15, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை தயிரை சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி, ஒரு நூல் கொண்டு கட்டித் தொங்க விடவும். அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்து தயிர் விழுது கிடைக்கும். அதில் சர்க்கரை, தேங்காய் துருவல், கிஸ்மிஸ்பழம், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, பூரி போல இடவும். ஒவ்வொரு பூரியிலும், இரண்டு ஸ்பூன் தயிர்ப் பூரணத்தை வைத்து சுருட்டிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சுருட்டி வைத்துள்ள பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

- ஆர்.ராஜலட்சுமி, ஹ¨ப்ளி

வாசகிகளின் குறிப்புகளை தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்..

அவல் ரசமலாய் ரசமலாய், சர்க்கரைப் பாகில் வேகாமல் பிரிந்து விட்டால் நெய் (அ) எண்ணெயில் பொரித்தெடுத்து பால் கலவையில் சேர்த்தால் சரியாக வரும்.

பாசிப்பருப்பு பிரியாணி பனீர் சேர்த்துச் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
தயிர் பூரணப் பூரி பூரணத்தில் டிரை ஃப்ரூட்ஸ் பொடித்து சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

படங்கள் தி.விஜய்