30 வகை கொழுக்கட்டை!

ராகி கொழுக்கட்டை

தேவையானவை ராகி மாவு, பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை ராகி மாவுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, நெய் விட்டுப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பள்ளிக்கு டிபன் பாக்ஸில் கொடுத்து அனுப்பினால் மாலை வரை பசி எடுக்காது.

முழுமுதற் கடவுளான விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை. விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, நீங்கள் நினைத்தது பலிக்கவும், தொட்டது செழிக்கவும் வெரைட்டியான 30 வகை கொழுக்கட்டைகளை இங்கே படைத்திருக்கிறோம்.

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த வாசகி கமலா எழுதி அனுப்பிய கொழுக்கட்டை ரெசிபிகளில் மூன்றை தேர்ந்தெடுத்து மேலும் 27 ரெசிபிகளை இணைத்து அட்டகாசமாகச் செய்து காட்டிய நங்கநல்லூர் பத்மா, கொழுக்கட்டை செய்யும் பக்குவத்தைப் பற்றியும் பட்டியலிடுகிறார்.

"பதப்படுத்திய மாவு தயாரிப்பதற்கு... அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். ஒரு துணியில் அந்த அரிசியை பரப்பி, நிழலில் காயப்போடவும். உலர்ந்ததும் மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக சீடை, முறுக்கு செய்யவும் இந்த மாவைப் பயன்படுத்தலாம்.

கொழுக்கட்டைத் தயாரிப்பதற்கு, இந்த மாவை கொதிக்கும் தண்ணீரில் தூவியபடியே போட்டுக் கிளற-வேண்டும். அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும். மாவை கிண்ணம்போல செய்யும்போது, கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு செய்தால் ஒட்டாமல் வரும்.''

வகைவகையாக கொழுக்கட்டை செய்து, விநாயகர் சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாடுங்கள்!

டைஜஸ்ட் கொழுக்கட்டை

தேவையானவை பச்சரிசி மாவு - ஒரு கப், இஞ்சி-பூண்டு பேஸ்ட், அரைத்த ஓமம், புதினா விழுது - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை அரிசி மாவை கொதிக்கும் நீரில் தூவி கட்டி தட்டாமல் கிளறவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட், ஓமம், உப்பு, புதினா விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வயிறு மந்தமாக இருக்கும்போது மாலை நேர சிற்றுண்டிக்கு இந்த டைஜஸ்ட் கொழுக்கட்டை மிகவும் நல்லது. சட்னி தொட்டு சாப்பிட, மிகவும் நன்றாக இருக்கும்.

அன்னாசிப்பழக் கொழுக்கட்டை

தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், அன்னாசிப்பழ துண்டுகள் - 10, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - அரை கப், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, அன்னாசிப்பழ துண்டுகள், தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வேக வைத்து, நீரை வடித்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, அரைத்த அன்னாசிப்---பழக் கலவையைப் போட்டு கெட்டியாக பூரணம் போல் கிளறி, இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவைத் தூவியபடியே கெட்டியாகக் கிளறி இறக்கவும். கை பொறுக்கும் சூட்டில் பிசைந்து உருட்டி, விரல்களால் மெல்லிய கிண்ணம் போல செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

வழக்கமான கொழுக்கட்டையைவிட இது மாறுபட்ட சுவையில் இருக்கும்.

அம்மணி கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒன்றரை கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 1, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாவைத் தூவிக் கிளறி இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசையவும். இதை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

தவழும் சின்ன குழந்தைகள் வீட்டுப் படியை தாண்டும்போது, இந்த கொழுக்கட்டை செய்து படைப்பது வழக்கம்.

பப்பாளி கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒன்றரை கப், பப்பாளிப்பழத் துண்டுகள் - 10, பொடித்த வெல்லம், கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்-காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் அரிசி மாவைத் தூவி கட்டி தட்டாமல் கெட்டியாகக் கிளறி இறக்கவும். கடலைப்-பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் பப்பாளித் துண்டுகள், வெல்லம், நெய், தேங்காய் துருவல் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

வெந்த அரிசி மாவை நன்றாகப் பிசைந்து சிறு கிண்ணம் போல் செய்து, உள்ளே பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

கடலைப்பருப்புடன் பழத் துண்டுகள் சேர்த்து செய்வதால் ருசி அபாரமாக இருக்கும்.

கீரை கொழுக்கட்டை

தேவையானவை அரிசி ரவை - ஒரு கப், (நைஸாக ரவை போல் அரைத்த அரிசி), ஆய்ந்து பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை, முளைக்கீரை - தலா ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ரவையைக் கொட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். கீரைகளை நெய் விட்டு வதக்கி, வெந்த அரிசி ரவையுடன் சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்க-வும்.

இரும்புச் சத்து நிறைந்த சுவையான கொழுக்கட்டை இது.

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை அரிசி ரவை - ஒரு கப், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - தலா ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு, கேரட், குடமிளகாய், கோஸ் இவற்றுடன் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நான்கு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் அரிசி ரவையைப் போட்டுக் கிளறி, வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

எல்லா காய்களும் சேர்த்து செய்யலாம். அரிசி ரவைக்கு பதில் கோதுமை ரவையிலும் செய்யலாம்.

பிரெட் கொழுக்கட்டை

தேவையானவை பிரெட் துண்டுகள் - 4, அரிசி மாவு - அரை கப், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை பிரெட்டுடன் தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.

அரிசி மாவைக் கொதிக்கும் நீரில் தூவி, கெட்டியாகக் கிளறி இறக்கவும். இந்த மாவை நன்றாகப் பிசைந்து உருட்டி கிண்ணம் போல் செய்து, உள்ளே பிரெட் பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

இந்தக் கொழுக்கட்டையை குழந்தைகள் விரும்பி சாப்பிடு-வார்கள்.

அரிசி ரவை கொழுக்கட்டை

தேவையானவை அரிசி - ஒன்றரை கப், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை அரிசியுடன் மிளகு சேர்த்து ரவை போல் உடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் 6 கப் தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, உப்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அரிசி ரவையைத் தூவிக் கிளறி, நன்றாக வெந்ததும் இறக்கவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

இதற்கு வெங்காய கொத்சு சூப்பர் காம்பினேஷன்.

வேர்க்கடலை கொழுக்கட்டை

தேவையானவை அரிசி மாவு - இரண்டு கப், வறுத்த வேர்க்கடலை - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை வேர்க்கடலையுடன் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கடாயில் போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாகக் கிளறி இறக்கவும்.

அரிசி மாவைக் கொதிக்கும் நீரில் தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். இந்த மாவை சிறு கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

மசாலா கொழுக்கட்டை

தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 1, சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு - 4 பல், பட்டை - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை அரிசி மாவைக் கொதிக்கும் நீரில் தூவி கெட்டி-யாகக் கிளறி இறக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, பட்டையை மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதைக் கிளறிய மாவில் போட்டு, உப்பு சேர்த்துப் பிசையவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு மசாலா பவுடரையும் கலந்து செய்யலாம். இதற்கு தொட்டுக் கொள்ள புதினா-கொத்தமல்லி சட்னி நன்றாக இருக்கும்.

பால் கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப், பால் - அரை லிட்டர், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை கப்.

செய்முறை அரிசி மாவைக் கொதிக்கும் நீரில் தூவிக் கிளறி இறக்கவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க-வும். தேங்காய் துருவலை அரைத்து பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் உருண்டைகளைப் போட்டு, ஏலக்காய்த்தூள், வெல்லத்தை பொடித்துப் போட்டு, எல்லாம் சேர்ந்து கொதித்த-தும் இறக்கவும்.

வெல்லம் சேர்த்து செய்வதால் பிரமாதமான ருசியில் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.

உளுந்து கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப், உளுத்தம்-பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை உளுத்தம்பருப்பை ஊற வைத்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, கெட்டி யாக அரைத்துக் கொள்ளவும். இதை ஆவியில் வேக விட்டு உதிர்த்துக் கொள்ளவும். எண்-ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, உதிர்த்த பருப்புக் கலவையுடன் சேர்க்கவும்.

அரிசி மாவைக் கொதிக்கும் நீ-ரில் தூவி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறி சிறு கிண்ணம் போல் செய்து உள்ளே பருப்புக் கலவையை வைத்து, சோமாசி வடிவத்தில் மூடி, வேக விட்டு எடுக்கவும்.

மாலை டிபனுக்கு ஏற்ற கொழுக்கட்டை இது.

கோவா கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை பாலைக் கெட்டியாகக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்-தூள் சேர்த்து கோவா பதத்தில் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்-ட-வும். கொதிக்கும் நீரில் அரிசி மாவைத் தூவிக் கிளறி சிறு உருண்டைகளாக உருட்டி, சிறு கிண்ணம் போல் செய்யவும். இதன் உள்ளே கோவா உருண்டையை வைத்து கொழுக்கட்டை வடிவத்தில் மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

கலக்கலான சுவையில் இருக்கும் இந்த கோவா கொழுக்கட்டை.

காராமணி கொழுக்கட்டை

தேவையானவை சிவப்புக் காராமணி - கால் கப், அரிசி மாவு - 2 கப், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு கப்.

செய்முறை அரிசி மாவைப் பொன்-னிறமாக வறுக்கவும். வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். சிவப்புக் காராமணியை லேசாக வறுத்து ஊற வைக்கவும்.

இந்தக் காராமணியுடன், வெல்லக் கரைசலை சேர்த்து வெந்த மாவில் கொட்டிப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதை ஆவியில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

இதே முறையில் இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து காரக் கொழுக்கட்டையும் செய்யலாம்.

பொட்டுக்கடலை கொழுக்கட்டை

தேவையானவை பொட்டுக்கடலை - அரை கப், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில், சிறிது சிறிதாக அரிசி மாவைத் தூவி கட்டி தட்டாமல் கிளறி, நன்கு பிசைந்து சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். பொட்டுக் கடலையுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். அரிசி மாவு உருண்டைகளை சிறு கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இந்தக் கொழுக்-கட்டையை வேக வைக்-காமல், எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம். மைதாவைப் பிசைந்து இந்த பூரணத்தை வைத்து சோமாசியாக செய்யலாம்.

சுரைக்காய் கொழுக்கட்டை

தேவையானவை தோல் சீவி துருவிய சுரைக்காய், பொடித்த வெல்லம் - தலா அரை கப், அரிசி மாவு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அரிசி மாவை தூவிக் கிளறி இறக்கவும். சுரைக்காய்த் துருவலை நெய் விட்டு வதக்கி வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பூரணமாகக் கிளறவும். இதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து பிசைந்து உருட்டவும். அரிசி மாவை கிண்ணம் போல் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

புரொட்டீன் கொழுக்கட்டை

தேவையானவை அரிசி, கேழ்வரகு, கம்பு, திணை, கோதுமை, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கொள்ளு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோளம் - 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 5, பச்சை மிளகாய் - 4, உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை அரிசி, கேழ்வரகு, கம்பு, திணை, சோளம், கோதுமை, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கொள்ளு எல்லா-வற்றையும் கடாயில் வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயில் உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்து அரைத்த சத்து மாவைத் தூவி கெட்டியாகக் கிளறி இறக்கி, பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

கடைகளில் விற்கும் சத்துமாவிலும் இந்தக் கொழுக்கட்டையை செய்யலாம். காரத்துக்கு பதில் வெல்லம் சேர்த்து இனிப்பு கொழுக்கட்டையும் செய்யலாம்.

பரங்கிக்காய் கொழுக்கட்டை

தேவையானவை பரங்கி கீற்று - 1, நசுக்கிய வெல்லம் - அரை கப், பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப், ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.

செய்முறை ஒரு கப் கொதிக்கும் நீரில் அரிசி மாவைத் தூவி நன்றாகக் கிளறி பிசையவும். பரங்கிக்காயை தோல் சீவி துருவி நெய் விட்டு வதக்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக பூரணம் போல் கிளறவும். பிசைந்த அரிசி மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு கிண்ணம் போல செய்து, பூரணம் வைத்து மூடி, ஆவியில் வேக- வைத்து எடுக்கவும்.

அரிசி ரவை இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை உடைத்த அரிசி ரவை - ஒரு கப், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை 2 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் அரிசி ரவையைக் கொட்டி வேக வைக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, வேக வைத்த அரிசி ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் சேர்த்துப் பிசைந்து நீளவாக்கில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அரிசி ரவையில் உப்புமா செய்வதற்கு பதிலாக இனிப்பு கொழுக்கட்டையும் செய்யலாம்.

பாசிப்பருப்பு - நட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தாபருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லத்தூள் - அரை கப்.

செய்முறை பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும். பாதாம்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். இதனுடன் முந்திரிப்பருப்பு, பிஸ்தா, வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். இதைக் கடாயில் கொட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டிப் பூரணமாகக் கிளறவும். அரிசி மாவை கொதிக்கும் நீ-ரில் தூவி கெட்டியாகக் கிளறி கிண்ணம் போல் செய்து, பூரணத்தை உள்ளே வைத்து மூடி, வேக விட்டு எடுக்கவும்.

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது, இந்த நட்ஸ் கொழுக்-கட்டை. உலர் பழங்களுடன் வெல்லப் பாகு வைத்து உருண்டையாகப் பிடித்தும் கொடுக்கலாம்.

உருளைக்கிழங்கு கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 3, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம்பழம் - அரை மூடி, உப்பு, எண்ணெய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள், கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை உருளைக்-கிழங்கை தோல் சீவி வேக- வைத்து மசிக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், கடலைப் பருப்பு தாளித்து கொத்தமல்லி, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சம்-பழத்தை பிழிந்து-விடவும். அரிசி மாவை கொதிக்கும் நீரில் தூவி கெட்டி யாகக் கிளறி கிண்ணம் போல் செய்து, உள்ளே உருளைக்கிழங்கு பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

நெல்லிக்காய் கொழுக்கட்டை

தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், பெரிய நெல்லிக்காய் - 6, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை நெல்லிக்காய்களை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கவும். நன்றாக ஆறியதும் நெல்லிக்காய்களை எடுத்து கொட்டை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் அரைத்து வெல்லம் சேர்த்து கடாயில் போட்டு கெட்டியாகக் கிளறி ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, உருட்டிக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மாவைத் தூவிக் கிளறி இறக்கவும். நெய் விட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி கிண்ணம் போல் செய்து, உள்ளே நெல்லிக்காய் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

இரும்புச் சத்து நிறைந்த நெல்லிக்காயை சேர்ப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதேமுறையில் மைதா மாவைப் பிசைந்து போளி தட்டலாம்.

பீட்ரூட் - கேரட் கலர்ஃபுல் கொழுக்கட்டை

தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், துருவி வதக்கிய கேரட், பீட்ரூட் - அரை கப், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை பீட்ரூட், கேரட் துருவலுடன் தேங்காய், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் அரிசி மாவைத் தூவிக் கிளறி பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய மாவைக் கிண்ணம்போல் செய்து அதில் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

வயலட், ஆரஞ்சு என கலர்ஃபுல்லாக இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.

சோளக் கொழுக்கட்டை

தேவையானவை பதப்-படுத்திய அரிசி மாவு - ஒரு கப், பேபிகார்ன் - 1, காய்ந்த மிளகாய் - 1, தேங்காய் துருவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை பேபி-கார்னுடன் மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவைத் தூவிக் கிளறி நன்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் நெய் விட்டு அரைத்த பேபிகார்ன் கலவையைப் போட்டு, கெட்டியாகக் கிளறி இறக்கவும். உருட்டிய மாவைக் கிண்ணம் போல் செய்து அதனுள் பேபிகார்ன் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கமகம வாசனையுடன் அருமையாக இருக்கும் இந்தக் கொழுக்-கட்டை.

முப்பருப்பு கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.

செய்முறை கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றையும் ஊற வைத்து மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதை இட்லித் தட்டில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மாவைத்- தூவிக் கிளறி இறக்கி, கிண்ணம் போல் செய்து, அதனுள் பருப்பு பூரணத்தை வைத்து நீளவாக்கில் மூடி, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

செய்த பூரணம் மீந்து விட்டால், எண்ணெய் விட்டு வதக்கி பொரியலாகவும் சாப்பிடலாம்.

ஓட்ஸ் காரக் கொழுக்கட்டை

தேவையானவை மைதா மாவு - அரை கப், ஓட்ஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை மைதா மாவில் வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஓட்ஸ§டன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறு கிண்ணம் போல் செய்து ஓட்ஸ் உருண்டைகளை அதனுள் வைத்து மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

தேங்காய் பூரண கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம், தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாவை சிறிது சிறிதாக கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக்கி, கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக வைத்து இறக்கவும்.

எந்த காரியத்தை செய்தாலும் பூரணத்துவம் அடைய பிள்ளை-யாருக்கு இந்தக் கொழுக்கட்டையை செய்து வணங்குவது வழக்கம்.

கேசரி கொழுக்கட்டை

தேவையானவை ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - 3 கப், எண்ணெய் - தேவையான அளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை மைதாவை கொதிக்கும் நீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். ரவையை நெய் விட்டு வறுத்து கொதிக்கும் நீர் விட்டுக் கிளறி, கூடவே சர்க்கரை, வறுத்த முந்திரி, கேசரிபவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதாவைக் கிண்ணம் போல் செய்து, அதில் உருட்டிய ரவை கேசரியை வைத்து மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

விரத நாட்களிலும் ஹோமம் போன்ற விசேஷங்களுக்கும் இந்த கொழுக்கட்டை செய்வது நல்லது. நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

எள் கொழுக்கட்டை

தேவையானவை பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப், எள் - ஒரு சிறிய பாக்கெட், பொடித்த வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.

செய்முறை ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாவைத் தூவி, கெட்டியாகக் கிளறி இறக்கவும். எள்ளை நன்றாக வறுத்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கிளறி வைத்திருக்கும் மாவை சிறிய கிண்ணம் போல் செய்து அதில் எள் பூரணத்தை வைத்து மூடி, ஆவியில் வேக வைக்க-வும்.

தொகுப்பு ரேவதி - படங்கள் வி.செந்தில்குமார்
அட்டைப்பட ஓவியம் மணியம் செல்வன்