மாவில் கலக்க பொடியாக நறுக்கிய சின்ன-வெங்காயம், சிறு துண்டுகளாக நறுக்கிய சீஸ் - தலா ஒரு கப், கொத்தமல்லி - அரை கப், பச்சை மிளகாய், கறிவேப்பிலை - தலா 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை மாவுக்குக் கொடுத்துள்ள பொருட்களில் ஜவ்வரிசி நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக ஊற வைக்கவும். ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கரைக்கவும். அதை நன்றாகப் புளிக்க வைக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி சூடாக மாவில் போட்டு கலந்து கொள்ளவும்.
குழிப்பணியார கல்லில் எண்ணெய் விட்டு, மாவை குழியின் முக்கால் அளவுக்கு ஊற்றி அதனுள் ஒரு சீஸ் துண்டை வைத்து மூடவும். தீயை குறைத்து, வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டுச் சிவந்ததும் எடுக்கவும்.
குறிப்பு சீஸில் உப்பு இருக்கும் என்பதால், மாவில் சற்றுக் குறைவாக சேர்த்துக் கொள்ளவும்.
- ரேவதி, படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக்
|