Published:Updated:

வரம் செய்ய விரும்பு

வரம் செய்ய விரும்பு

வரம் செய்ய விரும்பு

வரம் செய்ய விரும்பு

Published:Updated:

வரம் செய்ய விரும்பு
வரம் செய்ய விரும்பு
வரம் செய்ய விரும்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனிதா குப்புசாமி (பாடகி)

"தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்லாததால ஆஸ்பிட்டல்ல சேர்த்திருந்தாங்க. அவங்களப் பார்க்க போயிருந்தேன். சொந்தக்காரங்கள்லாம் கவலையோட பேசிக்கிட்டிருக்கற நேரத்துல, பக்கத்துல நின்னுக்கிட்டிருந்தவரோட செல்போன், 'வேர் இஸ் த பார்ட்டி... எங்க வூட்டுல பார்ட்டி'னு அலறல் போடுது. அந்த ஆளும் உடனடியா போனை அட்டெண்ட் பண்ணவோ... இல்லை சைலன்ட் பண்ணவோ முயற்சிக்காம பாட்டை வேற ரசிச்சுக்கிட்டு நிக்காறாரு. அந்த ரிங்டோன் மேலயே எனக்கு செம எரிச்சல் வந்துடுச்சு. பொதுவாவே, 'ரிங்டோன்'ங்கிற பேருல கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாம, கண்ட பாட்டையும் அதுல வெச்சுக்கிட்டு, இடம், பொருள், ஏவல் தெரியாம அலற விடறதே பலருக்கும் ஃபேஷனா இருக்கு. இப்படிப்பட்ட ஃபேஷனை வதம் பண்ணணும்."


தீனா (ரேடியோ ஜாக்கி, பிக். எஃப்.எம்.)
வரம் செய்ய விரும்பு

''நம்ம தலையை விட்டு, நம்ம பர்மிஷன் இல்லாமயே ஓடிப்போற முடிகளை எப்படி வதம் பண்றதுனு ரொம்ப நாளாவே ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன். 'உங்க தலைக்கு மேலயே உக்கார்ற அளவுக்கு நாங்க பெரிய ஆளுங்க'ங்கற கொழுப்பு இந்த முடிங்களுக்கு ரொம்பவே இருக்குதுங்க. என்னதான் பண்ணாலும் நம்ம பர்சனாலிட்டிக்கு பங்கம் வைக்கிறதே தலைமுடிங்களுக்கு வேலையாப் போச்சு. பாக்காத வைத்தியம் இல்ல.. போகாத பார்லர் இல்ல.. கலரிங் பண்ணி, ஷாம்பூ போட்டுனு எவ்வளவு செல்லமா பாத்துக்கறோம். ஆனா, கொஞ்சம்கூட நன்றி விசுவாசம் இல்லாம... நம்மளை விட்டு ஓடுறதுலதான் குறியா நிக்குதுங்க. இப்படி திமிருத் தனமா நம்ம தலையை விட்டு நழுவுற முடிகளை சும்மா விட்டு வைக்கலாமா?"


பேராசிரியர் பெரியார்தாசன்
வரம் செய்ய விரும்பு

''தகுதி, திறமை அடிப்படையில எல்லாரும் மேல வரமுடியும். ஆனா... எந்தவிதமான தகுதியும் இல்லாம மேல வர்றதுக்கு பல பேரு அலையறாங்க. அப்படிப்பட்ட ஆளுங்க, கொஞ்சம்கூட கூச்சபடாம... 'நீங்க கொஞ்சம் உதவக்கூடாதா?'னு ரொம்ப உரிமையோட உள்ள நுழைவாங்க. உதாரணத்துக்கு, 'உங்களுக்குதான் டைரக்டர் பாரதிராஜா நல்ல பழக்கமாச்சே... என்னோட ஒண்ணுவிட்ட மாமா பையனுக்கு சான்ஸ் வாங்கித் தர முடியுமா?'னு போற போக்குல கேட்பாங்க. இதெல்லாம் டூ மச் இல்லியா..? ஆனா, இப்படி ஒரு கூட்டமே... அலையுது. அந்த மனோபாவத்தை வதம் செய்யணும்.

'பசு மாட்டுக்குத் தண்ணி வேணும்'னு சொல்லிக்கிட்டுகூட இன்னொருத்தர்கிட்ட போய் பிச்சை எடுக்கற மாதிரி நிக்கக் கூடாது’னு திருவள்ளுவரே சொல்லி வெச்சிருக்காரு. ஆக, அந்தக் காலத்துல இருந்தே இப்படிப்பட்ட ஆளுங்க சுழட்டிக்கிட்டுதான் இருக்கறானுங்க."


எஸ்.வி.சேகர்

வரம் செய்ய விரும்பு

"என் மகனை ஹீரோவா வெச்சு தயாரிக்கற படத்துக்காக கிழக்கு கடற்கரை சாலையில ஷ¨ட்டிங். கேமராவை ஃபோகஸ் பண்ணினா... ஹீரோ நிக்க வேண்டிய இடத்துல... 20 பேர் கொண்ட கும்பல் பல்லை நறநறனு கடிச்சுக்கிட்டு நிக்குது. '10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாத்தான் இங்க ஷ¨ட்டிங் நடத்தமுடியும்... எங்க கோயிலுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கணும்"னு மாத்தி மாத்தி மிரட்டிக் கேட்டாங்க. போலீஸ§க்கு போன் போட்டா... 'ஏன் சார் வம்பு... கேட்டதை கொடுத்துடுங்க'னு கூலா சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம ஐயாயிரம் தண்டம் அழுதேன். ஷ¨ட்டிங் முடிஞ்சு வெளியில வந்தா, என்னோட ஐயாயிரம் ரூபாயை 'டாஸ்மார்க்' கடையில கரைச்சிட்டு, உருண்டுகிட்டு கிடந்துது அந்தக் கும்பல்.

இப்படிப்பட்ட கும்பல் ஊருக்கு ஊர் உதார் விட்டுகிட்டு, சமுதாயத்தையும் கெடுத்து, குடும்பத்துக்கும் பிரயோஜனப்படாம திரிஞ்சுகிட்டே இருக்கு. இந்த நவீன நரகாசுரன்களை முதல்ல வதம் பண்ணணும்."


பர்வீன் சுல்தானா (பேச்சாளர்)

வரம் செய்ய விரும்பு

"அன்னிக்கு இருந்தது ஒரு நரகாசுரனா இருக்கலாம். ஆனா, இன்னிக்கு கோடி கோடி நரகாசுரன்கள் இருக்கறாங்க. ஆமாம்... நாம ஒவ்வொருத்தருமே ஒரு நரகாசுரன்தான்... அதாவது, நமக்குள்ள உக்கார்ந்துகிட்டு, நம்மளையெல்லாம் கண்டபடி காலி பண்ணிக்கிட்டிருக்கற கோபம்தான் அந்த நரகாசுரன். அதைத்தான் திட்டம் போட்டு காலி பண்ணணும். ஆனா, அது லேசு பட்ட காரியமில்ல. எனக்குக் கோபம் வந்தா, ‘பர்வீன்... நீ ரொம்பவே கோபப்படற’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். தன்னால கோபம் அடங்க ஆரம்பிச்சுடும். இப்படி அஹிம்சை வழியில கூட கோபத்தை வதம் பண்ணலாம்."


'கஞ்சா' கருப்பு

வரம் செய்ய விரும்பு

''முதல்ல இந்த 'ஃபாஸ்ட்ஃபுட்' கலாசாரத்தை ஒழிக்கணும்ங்கிறேன். உடனே, சாப்பாட்டுக்கு வேட்டு வைக்கிறேன்னு நினைச்சுப்புடாதீங்க. நான் சொல்ல வர்றது... ஏதோ ரெண்டு றெக்கை முளைச்சது கணக்கா 'சர்புர்'னு ரோட்டுல பறக்கறானுங்கள்ல முந்திரிக் கொட்டை முனுசாமிங்க... அவனுங்களச் சொல்றேன்.

பாவம் அந்தப் பெரிசு, தான் பாட்டுக்கு வடபழனி, ஆற்காட்டு ரோட்டுல ஒரு ஓரமாத்தான் அன்னிக்கு நடந்து போயிக்கிட்டிருந்துச்சு. ஏதோ எமன்கிட்ட இரவல் வாங்கிக்கிட்டு வந்த மாதிரி ஒரு டூ-வீலரைக் கொண்டு வந்து, பெருசோட முழங்கையை பேத்துட்டு, கொஞ்சம்கூட வருத்தமில்லாமல்ல பறந்து போயிடுச்சுங்க ரெண்டு பக்கிங்க..! இப்படியேதான் ஏகப்பட்ட பய புள்ளைக திரியுதுங்க. அதுங்க மனசுலயெல்லாம் படிஞ்சிருக்கற அந்த 'ஃபாஸ்ட்ஃபுட்' கலாசாரத்தை, வதம் பண்ணினாத்தான் எனக்குத் தீவாளி!"


சங்கர் (ரேடியோ ஜாக்கி, சூரியன் எஃப்.எம்.)

வரம் செய்ய விரும்பு

"என் டார்கெட் கொசு. அதுங்க பண்ற அநியாயத்தைச் சொல்லி மாளாதுங்க. மலேரியா, பைலேரியா, டெங்குனு அதுங்களால பரவுற வியாதிங்கதான் எத்தனை எத்தனை! இதையெல்லாம் பாக்கறப்ப... சிவபெருமான் மாதிரி ஒரு சூலாயுதத்தை எடுத்துக்கிட்டு, இந்தக் கொசுங்களையெல்லாம் ஓட ஓட விரட்டி சம்காரம் பண்ணணும்னு தினம் தினம் தோணிக்கிட்டே இருக்கு. ஒருநாள் இல்லாட்டியும் ஒருநாள்... அதுங்களையெல்லாம் போட்டுத் தள்ளினாதான் என் ஆத்மா சாந்தி அடையும்."


வடிவுக்கரசி


வரம் செய்ய விரும்பு

"நான் ஒரு பெரிய பிரச்னையில சிக்கிக்கிட்டு, போலீஸ் ஸ்டேஷன்படியெல்லாம் ஏறுற அளவுக்கு ஆகிப்போச்சு. இதுக்குக் காரணமே... 'நல்லது சொல்றேன் பேர்வழி'னு என்னைச் சுத்தி சுத்தி வந்துகிட்டிருந்த நாலஞ்சு பேர்தான். அவங்க சொன்ன யோசனையையெல்லாம் அப்படி அப்படியே நம்பி, அவசரப்பட்டு செயல்படுத்தினதால வந்த வினை அது. ஒருத்தரை அழிக்கறதுல இந்த அவசர புத்திக்கு இணையே இல்லீங்க. அதைத்தான் முதல்ல வதம் பண்ணணும்."


சாரதா நம்பிஆரூரன்

வரம் செய்ய விரும்பு

"என்னோட கணவர் இறந்த பிறகும், தலை நிறைய பூவும், நெற்றி நிறைய பொட்டும் வெச்சுக்கறத நான் மாத்திக்கல. இன்னிக்கு வரைக்கும் அதைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தச் சமுதாயத்தோட வழக்கப்படி பார்த்தா... அது தவறான காரியம். அப்படித்தான் நாம வளர்க்கப்பட்டு வந்திருக்கோம்.. இன்னமும்கூட வளர்க்கப்படறோம். ஆனா... அதை நான் ஏத்துக்க மாட்டேன். அன்பு, மரியாதை, பாசம்... இதெல்லாம் மனம் சார்ந்த விஷயம். அதை வெளிப்பூச்சால அடையாளப்படுத்திக் காட்டறதுங்கறது பெரும்பாலும் ஏமாத்து வேலையாத்தான் இருக்கும்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஆனா, கணவனை இழந்த ஒருத்தி இப்படி பூ, பொட்டு வெச்சுக்கிட்டு வலம் வர்றதை முதுகுக்குப் பின்னால... குறை சொல்லிப் பேசற கூட்டம் திரிஞ்சிகிட்டுதான் இருக்கு. அப்படிப்பட்ட சமூகத்தை வதம் செய்யணும்."

 

வரம் செய்ய விரும்பு
-
   
   
வரம் செய்ய விரும்பு
வரம் செய்ய விரும்பு