Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

பிரமாதம்...பலாக்கொட்டை கட்லெட்!
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் கைமணம்

'கடலை மாவு - முந்திரி கேக்

வாசகிகள் கைமணம்!

தேவையானவை ஹார்லிக்ஸ் - அரை கப், சர்க்கரை - அரை கப், அரைத்த முந்திரி விழுது - கால் கப், கடலை மாவு - கால் கப், நெய் - ஒரு கப்.

செய்முறை சிறிது நெய்யில் ஹார்லிக்ஸை கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது, கடலை மாவைப் போட்டு சிறிது தண்ணீர் கலந்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு, நெய்யில் கரைத்த ஹார்லிக்ஸையும் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக விடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வந்ததும் தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

- லஷ்மி சந்தானம், ஸ்ரீரங்கம்


மஷ்ரூம் ஸ்டஃப்டு நக்கெட்ஸ்

தேவையானவை மஷ்ரூம் - 5, பெரிய உருளைக்கிழங்கு - 2, துருவிய பனீர் - ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய், பிரெட் தூள் - தேவையான அளவு.

செய்முறை மஷ்ரூம்களை கழுவி சுத்தம் செய்து, இரண்டு இரண்டாக நறுக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துப் பிசறி ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.

வாசகிகள் கைமணம்!

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, கையால் மசித்துக் கொள்ளவும். இதில் பனீர், பச்சை மிளகாய், மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒரு துண்டு மஷ்ரூமை வைத்து மூடி, பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

- பி. இந்திராணி, சென்னை-32


பலாக்கொட்டை கட்லெட்

தேவையானவை பலாக்கொட்டை - 10, ரஸ்க் தூள், அரிசி மாவு, ரவை - தலா ஒரு கப், நறுக்கிய வெங்காயம், மைதா, கேரட் துருவல் - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்புத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை முதலில் பலாக்கொட்டையை தோலுரித்து, பொடியாக நறுக்கி வேக வைத்து, மிக்ஸியில் போட்டு மசிக்கவும். இதனுடன் அரிசி மாவு, வெங்காயம், ரவை, கேரட் துருவல், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டை மாவை வடை போல தட்டி, மைதா மாவில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி காயும் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

- கவிதா வீராசுவாமி, சென்னை-98


வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் அவருடைய கமென்ட்ஸ்...

கடலை மாவு - முந்திரி கேக் முந்திரிக்குப் பதிலாக பாதாம் சேர்த்தும் செய்யலாம்.

மஷ்ரூம் ஸ்டஃப்டு நக்கெட்ஸ் மஷ்ரூமினுள் முந்திரி, பாதாம், உலர் திராட்சையை கலந்து வைத்து, அதை உருளைக்கிழங்கு கலவை உருண்டைக்குள் வைத்து செய்தால் சுவை வித்தியாசமாக இருக்கும்.

பலாக்கொட்டை கட்லெட் மைதா மாவுக்குப் பதிலாக கடலை மாவிலும் செய்யலாம். கரகரப்பாக இருக்கும்.

படங்கள் வீ.நாகமண

வாசகிகள் கைமணம்!
 
   
   
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!