Published:Updated:

30 வகை முத்தான சமையல் !

30 வகை முத்தான சமையல் !

30 வகை முத்தான சமையல் !

30 வகை முத்தான சமையல் !

Published:Updated:

தீபாவளி ஸ்வீட்-காரம்
30 வகை முத்தான சமையல் !
30 வகை முத்தான சமையல் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

30 வகை ஸ்வீட்-காரம்
30 வகை முத்தான சமையல் !

'கடையில வாங்கினோமா... பாக்கெட் போட்டோமா... அக்கம், பக்கத்துக்கு நாலு கொடுத்துட்டு, நாமளும் நாலு அள்ளி வாயில போட்டோமா... முடிஞ்சுது தீபாவளி' - கடந்த சில பல வருடங்களாகவே பலருக்கும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது தீபாவளி.

ஆனால், 'என்னென்ன பலகாரம் செய்யலாம்... எப்படி எப்படிச் செய்யலாம்...' என்றெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு, தீபாவளி நெருக்கத்தில் ஒவ்வொன்றாக சுட்டு அடுக்கி வைத்து, கேட்கும்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கொடுத்து, அவர்கள் குதூகலிப்பதைப் பார்த்து நாமும் குஷியாகும் மகிழ்ச்சிக்கு இணையாக வருமா?

''அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் யாருக்கு நேரமிருக்கு? அதுமட்டுமில்ல... முன்னயெல்லாம் பக்கத்து வீட்டு பெரியம்-மாகிட்டா கேட்டா பாதுஷாவை பக்குவமா சொல்லித் தருவாங்க... இல்ல, செஞ்சு தருவாங்க. இப்ப யாரு இருக்கா... நானெல்லாம் பாதுஷா சுட்டா... அது பக்கோடா மாதிரிகூட வர்றதில்லையே..?'’ என்கிறீர்களா..? விட்டுத்தள்ளுங்கள் கவலையை!

இதோ... தீபாவளி அனுபவத்தை மேலும் இனிமையாக்க 30 வகை பலகாரங்களோடு பந்தி வைக்கிறார் வசந்தா விஜயராகவன். அதை நீங்களும் செய்து உங்கள் பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள் என எல்லோருக்கும் பந்தியிட்டு சந்தோஷப்படுத்துங்கள்... சந்தோஷப்-படுங்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

கத்தியா

தேவையானவை கோதுமை மாவு - 2 கப், ஓமம் - 1 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு, நெய் சேர்த்து கெட்டியாகவும், மிருதுவாகவும் பிசையவும். அதனை ரிப்பன் வில்லை அச்சில் நிரப்பி, அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்

தேவையானவை மசித்த உருளைக்கிழங்கு - 2 கப், அரிசி மாவு - 4 கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்-தூள் - அரை டேபிள்ஸ்பூன், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எள், உப்பு சேர்த்துக் கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இந்த மாவை உருட்டி விரல் நீள துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், இந்த துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ரிப்பன் பக்கோடா

தேவையானவை அரிசி மாவு - 3 கப், கடலை மாவு - 1 கப், அரைத்த பூண்டு-காய்ந்த மிளகாய் விழுது- 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

30 வகை முத்தான சமையல் !

செய்முறை அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய்-பூண்டு விழுதைச் சேர்த்து, பிசிறில்லாமல் கலக்கவும். தேவையான அளவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பிழியும் பதத்துக்குப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், ரிப்பன் அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழியவும். முறுக்கு வெந்து பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.

மைதா கார ரோல்ஸ்

30 வகை முத்தான சமையல் !

தேவையானவை மைதா மாவு - 1 கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், அரிசி மாவு, நெய் - தலா 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டை-யில்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு, மாவு மிருதுவாகும் வரை பிசையவும். அதனை அரை மணி நேரம் ஊற விடவும். அரிசி மாவில் நெய்யை ஊற்றி க்ரீம் போல் வரும்வரை கையால் பிசையவும். பிறகு, மைதா மாவு கலவையிலிருந்து சிறிய அளவிலான மாவு உருண்டையை எடுத்து, சப்பாத்தி போல தேய்க்கவும். குழைத்த அரிசி மாவு கலவையை, அதன் மீது சமமாகத் தடவி, சீராகச் சுருட்டவும். சுருட்டிய ரோலை நீளவாக்கில் குழவியால் தேய்த்து, கத்தியால் சாய்வாக வெட்டவும். இதனைச் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதேபோல மொத்த மாவையும் செய்து முடிக்கவும்.

மில்க் பர்ஃபி

தேவையானவை திக்கான பால் - 2 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்த்தூள் -கால் டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பால் கெட்டியாக வரும் வரை கிளறவும். திரண்ட பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கிளறும்போது கெட்டியாகிவிடும். இதை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி, கரண்டியால் சமப்படுத்தி, ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

கஜுர் ஷாஹி துக்கடா

தேவையானவை பிரெட் - 8 துண்டுகள், ஏலக்காய்த்தூள்- அரை டீஸ்பூன், பாதம், பிஸ்தாதூள் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், பால் - 1 லிட்டர், விதை நீக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள் - 1 கப், ரோஸ் வாட்டர் - அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை விதை நீக்கி நறுக்கிய பேரீச்சம்பழம், ஏலக்காய்த்தூள், பாதம், பிஸ்தா தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசையவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கி, வட்டமாக வெட்ட-வும். அதனை அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்-ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து தனியே வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, சர்க்கரையைச் சேர்க்கவும். பொரித்த 2 பிரெட் ஸ்லைஸின் வட்டங்களுக்கு நடுவில் பேரீச்சம்பழக் கலவையைக் கொஞ்சம் வைத்து லேசாக அழுத்திவிடவும். பின்பு, அதனை கொதிக்-கும் பாலில் ஒரு நிமிடம் நனைத்து, தட்டில் பரப்பி வைக்கவும். மீதி பாலை மேலும் காய்ச்சி, நன்றாகக் கெட்டி-யானதும், தயாராக இருக்கும் பிரெட் வட்டங்களின் மீது ஊற்றி, ரோஸ் வாட்டர் தெளித்து, 'சில்'லென்று பரிமாறவும்.

ஓமப்பொடி வெல்ல லட்டு

தேவையானவை கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவைப் போட்டு, தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கையால் கலக்கவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். பிறகு, பிசைந்த மாவை ஓமப்பொடியாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் ஓமப்பொடிக்கு, அரை கப் வெல்லம் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உருட்டும் பதத்தில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஓமப்பொடியைக் கொட்டி, அதில் வெல்ல பாகை ஊற்றி, லட்டுகளாகப் பிடிக்கவும்.

கோகனட் டூட்டி-ஃப்ரூட்டி பர்ஃபி

தேவையானவை தேங்காய்த் துருவல் - ஒரு கப், டூட்டி-ஃப்ரூட்டி துண்டுகள் - அரை கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், நெய் - அரை டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் துருவல், டூட்டி-ஃப்ரூட்டி, சர்க்கரை சேர்த்து, அடுப்பில் மிதமான தீயில் வைத்து எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கலக்கும் வரை கிளறவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் அதனுடன் நெய் சேர்த்து, ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி, கரண்டியால் சமப்படுத்தவும். ஆறி, லேசாக இறுகும்போது துண்டுகள் போடவும்.

அவல் மிக்ஸர்

தேவையானவை அவல் - 2 கப், ஓமப்பொடி (ஸ்வீட் கடையில் கிடைக்கும் சிறிய வடிவ கார வகை), பொட்டுக்கடலை, வேர்க்கடலை - தலா கால் கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், பெருங்-காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் அவல், ஓமப்பொடி, பொட்டுக்-கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைத் தனித்--தனியாகப் போட்டு பொரித்து எடுத்து, ஒன்றாகச் சேர்க்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைக் கலக்கவும். பிறகு, பரிமாறவும்.

கோவா ஸ்வீட் பூரி

தேவையானவை கோவா - அரை கப், மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி, கம்பி பாகு பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும். பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.

30 வகை முத்தான சமையல் !

மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும். அதன் நடுவில் சிறிதளவு கோவாவை வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தேய்க்கவும். அடுப்பில் எண்ணெயைக் காய வைத்து, அதில் போட்டு பொரித்து எடுக்கவும். அவற்றை, தயாராக வைத்துள்ள சர்க்கரை பாகில் ஒரு நிமிடம் நனைத்து உடனேயே எடுத்துப் பரிமாறவும்.

மைதா ஸ்வீட் ரோல்ஸ்

தேவையானவை மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், அரிசி மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன், நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை மைதாவுடன் உப்பு சேர்த்து, நீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். அரிசி மாவுடன் நெய்யைச் சேர்த்து குழைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, மைதா மாவு கலவையை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து, அதில் அரிசி மாவு-நெய் கலவையை சிறிதளவு தடவி, பாய் போல் சுருட்டவும். குழவியால் நீள ரிப்பனாக தேய்த்து கத்தியால் சாய்வாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சர்க்கரையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு, நீர் விட்டு இரண்டு கம்பி பாகு பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும். பொரித்து வைத்திருக்கும் மைதா ரோல்களை இந்தப் பாகில் போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். அவை நன்றாக ஆறிய பிறகு பார்த்தால், ரோல்களைச் சுற்றி சர்க்கரைப் பாகு வெள்ளையாகப் படிந்திருக்கும். அதன் பிறகு பரிமாறலாம்.

சாக்லெட் பர்ஃபி

தேவையானவை டார்க் சாக்லெட் - 200 கிராம், சர்க்கரை இல்லாத கோவா - 400 கிராம், சர்க்கரை - முக்கால் கப். முந்திரி அல்லது பாதாம் துண்டுகள் - கால் கப்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை அடி கனமான பாத்திரத்தில் கோவாவைப் போட்டு 3 நிமிடம் கிளறவும். பிறகு, முந்திரி அல்லது பாதம் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி, தனியே வைக்கவும். சாக்லெட்டை சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சாக்லெட்டை போட்டால் அது உருக ஆரம்பிக்கும். ஏற்கெனவே கிளறி வைத்துள்ள கோவாவை 3 பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தில் உருகிய சாக்லேட்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மீதமிருக்கும் ஒரு பாக கோவாவை, நெய் தடவிய தட்டு ஒன்றில் பரப்பவும். அதன் மீது சாக்லெட் கலந்த கோவா கலவையை பரப்பவும். அதன் மீது மற்றொரு பாகத்தை (கோவா) பரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்றாகக் குளிர்ந்ததும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

தேங்காய்ப் பால் அல்வா

தேவையானவை கெட்டியான தேங்காய்ப் பால் - இரண்டு கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், வறுத்த முந்திரி துண்டுகள் - 20, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதை சல்லடையில் வடிகட்டி மறுபடியும் கொதிக்க விடவும். அதனுடன் தேங்காய்ப் பால், நெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியானதும்... முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

பாதாம் பர்ஃபி

தேவையானவை பாதாம் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போடவும். பிறகு, அவற்றின் தோலை நீக்கி சுத்தம் செய்து, பால் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

ஒரு கப் பாதாம் விழுதுக்கு 2 கப் சர்க்கரை என்கிற விகிதத்தில் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், நெய் சேர்க்கவும். விழுது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்துக்கு வந்ததும், ஒரு தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி ஆறவிடவும். பிறகு, துண்டுகள் போட்டு பரிமாறவும்.

சாக்லெட் ரோல்ஸ்

தேவையானவை மாரி பிஸ்கட் தூள் - ஒரு கப், கோகோ பவுடர் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், சர்க்கரைத்தூள் - முக்கால் கப், வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை பிஸ்கட் தூளில் பால், கோகோ பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.. அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து உருக்கவும். இதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலந்து பேஸ்ட்டாக குழைத்துக் கொள்ளவும். கெட்டியாகப் பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து, அதில் சர்க்கரைக் கலவையை சிறிதளவு தடவி, பாய் போலச் சுருட்டவும். அதனை ஃப்ரிட்ஜில் வைத்து 'சில்’ என்று ஆனதும் துண்டுகள் செய்து பரிமாறவும்.

உக்காரை

தேவையானவை கடலைப் பருப்பு - 1 கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - கால் கப், நெய் - கால் கப்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை கடலைப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய்யை விட்டு, அரைத்த கடலை மாவு, தூளாக்கிய வெல்லம், தேங்காய் துருவலைப் போட்டு, மிதமான தீயில், கெட்டியாக வரும் வரை கிளறவும். அதோடு, வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளறி பரிமாறவும்.

பேரீச்சம்பழம் - பால்கோவா பர்ஃபி

தேவையானவை பால் - அரை கப், பால்கோவா - 2 கப், சர்க்கரைத்தூள் - 2 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நன்றாக மசித்த பேரீச்சம்பழம் - 3 டேபிள்ஸ்பூன், பாதாம் துண்டுகள் - 10.

செய்முறை முதலில் மிக்ஸியில் பால், பேரீச்சம்பழம் சேர்த்து விழுதாக அரைக்கவும். அதனை அடுப்பில் மிதமான தீயில் வைத்துக் கெட்டியாகக் கிளறி வைத்துக் கொள்ளவும்.அடுத்து, கோவா மற்றும் சர்க்கரை இரண்டையும் சேர்த்து கைகளால் நன்றாகக் கலக்கவும். அதனை கனமான பாத்திரத்தில் இட்டு, அடுப்பில் வைத்து நெய் சேர்த்து 3 நிமிடம் கிளறவும். நெய் பளபளப்பாகப் பிரிந்து வரும்போது, லேசான பழுப்பு நிறத்துக்கு மாறும். அப்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இரண்டு கலவைகளும் ஆறிய பிறகு, கோவா கலவையில் ஒரு பாகத்தை ஒரு தட்டில் கைகளால் நன்றாக பரப்ப வேண்டும். இதன் மீது பேரீச்சம்பழக் கலவையை வைத்து, மறுபடியும் கோவா கலவையை பரப்ப வேண்டும். பிறகு, துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

மலாய் காஜா

தேவையானவை மைதா - 1 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், முந்திரி, பாதம், காய்ந்த திராட்சை, செர்ரி துண்டுகள் - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, பனீர் அல்லது சீஸ் துருவல் - அரை கப்.

செய்முறை உடைத்த முந்திரி, பாதம் துண்டுகளையும் பனீர் அல்லது சீஸ் துருவலையும் ஐந்து நிமிடத்துக்கு வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு, ஏலக்காய்த்தூள், டிரை ஃப்ரூட்ஸ் துண்டுகள், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும். அரிசி மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். மைதா மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கெட்டியாகவும் மிருதுவாகவும் பிசைந்து கொள்ளவும். அதனை சிறிய பூரிகள் போல் தேய்த்துக் கொள்ளவும். ஒவ்வொரு பூரியின் நடுவிலும் குழைத்த அரிசி மாவைத் தடவி, ஒரு ஸ்பூன் முந்திரி, டிரை ஃப்ரூட்ஸ் கலவையை வைத்து மூடி, மீண்டும் லேசாகக் குழவியால் தேய்த்து அடுப்பில் சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

காய்ந்த திராட்சை அல்வா

தேவையானவை திராட்சை - 1 கப், சர்க்கரை - அரை கப், உருக்கிய நெய் - கால் கப், முந்திரித் துண்டுகள் - கால் கப், பால் - 3 கப்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை திராட்சையை வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, திராட்சை விழுதைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, நன்கு கிளறவும். அது நகங்களில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகளைத் தூவி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

கர்ச்சிகா

தேவையானவை மைதா - 1 கப், ரவை - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.

பூரணம் செய்ய முந்திரி, பொட்டுக்கடலை - தலா அரை கப், சர்க்கரைத்தூள்- 1 கப், கசகசா, கொப்பரைத் தேங்காய் துருவல் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள்-கால் டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை முந்திரி, பொட்டுக்கடலை, கசகசா, கொப்பரைத் துருவல் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதோடு சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால்... பூரணம் ரெடி.

மைதா, ரவையுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 1 மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு, நன்றாக அடித்துப் பிசையவும். அதனை சிறிய பூரிகளாக தேய்த்து, நடுவில் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து மூடவும். அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சோன் பர்ஃபி

தேவையானவை மைதா மாவு - 1 கப், கடலை மாவு - 1 கப், நெய் - கால் கப், சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை அடி கனமான பாத்திரத்தில் நெய்யை காய வைத்து, அதில் மைதா, கடலை மாவைக் கொட்டி பொன்னிறமாகும் வரை கிளறிக் கொண்டிருக்கவும். அதேநேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கெட்டிப்பாகு (கையில் எடுத்தால் கெட்டியான சாந்தாக வரவேண்டும்) பதத்துக்கு கொதிக்க வைக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இந்தப் பாகில், மாவு-நெய் கலவையைக் கொட்டி, கரண்டியால் சீராகக் கிளறவும். மாவு கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

பொட்டுக் கடலை தட்டை

தேவையானவை பொட்டுக்கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - அரை கப், நெய் -2 டீஸ்பூன், மிளகாய்த்-தூள் - 2 டீஸ்பூன், வெள்ளை எள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய்த்தூள், எள் ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மெல்லிய-தாக தட்டவும், அதனை அடுப்பிலிருக்கும் சூடான எண்ணெ-யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கோதுமை மாவு -பாசிப்பருப்பு முறுக்கு

தேவையானவை கோதுமை மாவு - 1 கப், வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்தூள், நெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

30 வகை முத்தான சமையல் !

செய்முறை பாத்திரத்தில் கோதுமை மாவு, வேக வைத்த பாசிப்பருப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். கூடவே, நெய் சேர்க்கவும். பிறகு, மாவை முறுக்கு அச்சில் போட்டு, அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் சூடான எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

மைதா தேன்குழல்

தேவையானவை மைதா மாவு - 2 கப், உளுந்து மாவு - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை மைதா மாவை ஒரு மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டி, 20 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் உளுந்து மாவு, நெய், சீரகம், உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். அதனை தேன்குழல் வில்லை போட்ட அச்சில் போட்டு, அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் சூடான எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

மூங்தால் பர்ஃபி

தேவையானவை வறுத்து அரைத்த பயத்த மாவு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரைத்தூள் - தலா 1 கப், உருக்கிய நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை வறுத்து அரைத்த பயத்த மாவு, சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். நெய்யைச் சூடாக்கி, கலந்து வைத்துள்ள மாவில் கொட்டி, சூடு ஆறுவதற்கு முன்பு சீராகக் கலக்கவும். பின்பு, சிறிது நெய்யை டிரேயில் தடவி, அதில் மாவைக் கொட்டி, கரண்டியால் நன்றாக அழுத்திச் சமப்படுத்தவும். பிறகு, ஃப்ரிட்ஜில் இருபது நிமிடங்கள் வைத்து வெளியே எடுத்து, விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

சிரமமின்றிச் சீக்கிரமாகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய சுவையான ஸ்வீட் இது.

ஆந்திரா போளி

தேவையானவை மைதா மாவு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்

30 வகை முத்தான சமையல் !

பூரணத்துக்கு கடலைப்பருப்பு, சர்க்கரை - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... பூரணம் ரெடி.

மைதா மாவுடன் நெய், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். சிறுசிறு உருண்டைகளாகச் செய்து, எண்ணெய் தொட்டு, பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாகத் தட்டி, அதில் ஒரு டீஸ்பூன் கடலைப் பூரணத்தை வைத்து மூடவும். மறுபடியும் கை விரல்களினால் மெல்லியதாக தட்டி, தோசைக்கல்லில் இட்டு அதன் இரு புறமும் நெய் ஊற்றி, பொன்னிறமாக எடுக்கவும்.

பாதுஷா

தேவையானவை மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப், புளித்த தயிர் - ஒரு கரண்டி, நெய் - 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை நெய்யையும் சமையல் சோடாவையும் நன்றாகக் குழைத்து, அதனுடன் மைதா மாவையும், தயிரையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மிருதுவாக, கெட்டியாகப் பிசையவும். கடாயில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, கெட்டியான பாகானதும் இறக்கவும். வேறொரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, வடை போல் தட்டி, கட்டை விரலினால் நடுவே மெதுவாக குழியிடவும். பிறகு, எண்ணெயில் போட்டுப் பொரித்து, சர்க்கரைப் பாகில் 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து தட்டில் வைக்கும்போது சர்க்கரை பூத்திருக்கும். அப்போது பரிமாறலாம்.

சந்திரலேகா

தேவையானவை பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி துண்டுகள் - 20, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாக வரும் வரை வதக்கவும். இறக்கும் முன்பு முந்திரித் துண்டுகளை சேர்க்கவும். பின்பு, ஒரு துணியில் பரப்பி, ஆறியதும் சிறிய துண்டுகள் போட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பொட்டுக்கடலை பட்டர் முறுக்கு

தேவையானவை பொட்டுக்கடலை - 2 கப், அரிசி மாவு - அரை கப், வெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரைடீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை மிக்ஸியில் பொட்டுக்கடலையை மாவாக அரைத்துக் கொள்ளவும். அதோடு வெண்ணெய், அரிசி மாவு, உப்பு, சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். ஒரு துளையுள்ள அச்சில் நிரப்பி, அடுப்பில் சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஆற வைத்து, துண்டுகளாக்கி காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்துப் பரிமாறலாம்.

தீபாவளி லேகியம்

தேவையானவை சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் - தலா அரை கப், சிறிய மஞ்சள் துண்டு - ஒன்று, கசகசா - கால் கப், ஏலக்காய், கிராம்பு - தலா 4, வெல்லம் - ஒன்றரை கப், நெய், நல்லெண்ணெய் - தலா கால் கப்.

30 வகை முத்தான சமையல் !

செய்முறை சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், மஞ்சள், கசகசா, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, அரைத்து வைத்துள்ள பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். கெட்டியாக வரும்போது, நல்லெண்ணெய் சேர்த்து, மீண்டும் சிறிது நேரம் கிளறவும். கையில் ஒட்டாமல் வரும் பதத்துக்கு வந்ததும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இந்த லேகியம் தீபாவளிக்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் ஒரு மருந்து. அதாவது, தீபாவளி சமயத்தில் நம்முடைய உணவானது வழக்கமான பாணியில் இல்லாமல் அதிகப்படியாக அமைந்துவிடும். குறிப்பாக அதிக அளவில் இனிப்பு சேர்வதால், அது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தக் கூடும். அந்தப் பிரச்னையைத் தீர்க்கவே இந்த தீபாவளி லேகியம்.

தொகுப்பு நாச்சியாள், படங்கள் எம்.உசேன்

30 வகை முத்தான சமையல் !
 
30 வகை முத்தான சமையல் !
30 வகை முத்தான சமையல் !