பிரீமியம் ஸ்டோரி

கிச்சன் கிளினிக்!
‘செஃப்’ ஜேக்கப்
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
கலங்கடிக்கும் சர்க்கரை... கைகொடுக்கும் கம்பஞ்சோறு !

சர்க்கரைக் குறைபாடுள்ளவர்கள் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது... உணவுக் கட்டுப்பாடு. அதேசமயம், கட்டுப்பாடு என்ற பெயரால், உப்புச் சப்பில்லாமல்தான் சாப்பிட வேண்டுமா?

"தேவையே இல்லை..." என்றபடி ருசியான ரெசிபிகளை தந்துவரும் செஃப் ஜேக்கப், இந்த இதழிலும் தொடர்கிறார்...

 

ஓட்ஸ் - வீட் ரொட்டி

தேவையானவை ஓட்ஸ் மீல் மாவு, முழுகோதுமை மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 30 கிராம், கொத்த மல்லி - 15 முதல் 20 கிராம், இஞ்சி - 10 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை ஓட்ஸ் மீல் மாவு, கோதுமை மாவு இரண்டையும் கலந்து வெந்நீர் விட்டு சிறிது உப்பு சேர்த்துப் பிசையவும். இதனால் மாவு நன் றாக மிருதுவாகிவிடும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

கொத்தமல்லி சட்னி, வெஜிடபிள் சாலட் போன்றவை இதற்கு சரியான சைட் டிஷ். இரவில் சாப்பிட மிகவும் ஏற்றது.

கம்பஞ்சோறு உருண்டை

தேவையானவை நையப் புடைத்த கம்பு - 150 கிராம், கரகரப்பாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 3 பல், உப்பு, நீர்மோர் - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை முந்தைய நாளே கம்பை ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஊறிய கம்பை அதில் போடவும். கூடவே... சுக்குப் பொடி, மிளகு, உப்பு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறவும். நன்றாக மிருதுவாகி கெட்டிப் பதத்தில் வந்ததும் ஆறவிட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். இதை நீர்மோரில் போட்டு வைத்து, இரவு நேரத்தில் சாப்பிடவும்.

ஓட்ஸ் மீல் உப்புமா

தேவையானவை ஓட்ஸ் மீல் - 100 கிராம், வெங்காயம் - 25 கிராம், தக்காளி - 20 கிராம், கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பொன்நிறமாக வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர் விடவும். உப்பு சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும், ஓட்ஸ் மீலை கொட்டி வேக வைத்து, கறிவேப்பிலை சேர்க்கவும். இதுவும் இரவு வேளையில் சாப்பிடக்கூடிய உணவுதான்.

செஃப் ஜேக்கப் தந்துள்ள ரெசிபியில் சொல்லப்பட்டுள்ள அளவுகள், ஒரு வேளை உணவு தயாரிப்பதற்கானவை. இதில் சொல்லப்பட்டுள்ளபடி தயாரித்துச் சாப்பிடலாம்.

இந்த ரெசிப்பிகள் பற்றி 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்...

"ஓட்ஸ் - வீட் ரொட்டி சர்க்கரை நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் 500 முதல் 550 கிலோ கலோரி எனர்ஜி தேவை. இந்த ரொட்டியில் 78 கிராம் மாவுச்சத்து, 15.5. கிராம் புரதம், 19.5 கிராம் கொழுப்பு ஆகியவை இருப்பதால் 550 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கிறது. இரவில் இதைச் சாப்பிட்டால் காலை 6 மணி வரை பசியே எடுக்காது, மிகவும் மெதுவாகத்தான் சர்க்கரை கூடும்.

கிச்சன் கிளினிக் !

கம்பஞ்சோறு உருண்டை வயிறை நிரப்பும் உணவு இது. இரும்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. உடலுக்கு எதிர்ப்புச் சக்தி கிடைக்கத்தான் இந்த உருண்டைகளை மோரில் போடுகிறோம். இப்படிச் செய்வதன் மூலம், உணவில் கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தால், அவை விரட்டியடிக்கப்படும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

செஃப் சொல்லியிருக்கும் கம்பு உள்ளிட்டவற்றின் அளவுகளை வைத்துக் கணக்கிட்டால், மொத்தம் ஆறு கம்பஞ்சோறு உருண்டைகள் தயாரிக்கலாம். ஓர் இரவு வேளைக்கு இது போதுமான உணவு.

இதில், 101 கிராம் மாவுச்சத்து, 17.5 கிராம் புரதம், 7.5 கிராம் கொழுப்பு, 12 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் 541 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கும்.

ஓட்ஸ் மீல் உப்புமா இதுவும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய அட்டகாசமான உணவுதான்.

72 கிராம் மாவுச்சத்து, 16 கிராம் புரதம், 18 கிராம் கொழுப்பு இருக்கிறது. இதன் மூலம், 540 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கும்."

- பரிமாறுவோம்...

கிச்சன் கிளினிக் !
 
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு