எலும்பில் உள்ள கால்சியத்தையும், புரதத்தையும் அப்படியே பாதுகாக்கும் திறன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களுக்கு உண்டு. மாதவிடாய் நின்ற பின் ஹார்மோன் குறைபாடு ஏற்படுவதால், எலும்புகள் வலுவிழந்து விடுகின்றன. இதனால், பெரும்பாலும் பெண்கள்தான் இந்நோய்க்கு ஆளாகிறார்கள்.
இப்படிப்பட்ட பாதிப்பிலிருப்பவர்கள் ஆட்டோ, வேன், டூ-வீலர் என்று பயணிக்கும்போது மேடு, பள்ளங்களில் வேகமாக வண்டி ஏறி இறங்கினால்... முதுகு, இடுப்பு எலும்புகள் முறிந்து போக வாய்ப்பிருக்கிறது. லேசாகக் கையை ஊன்றிக் கொண்டு எழும்போது மணிக்கட்டு எலும்பு உடைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.
இந்நோய் இளம்வயதினரை தாக்குவதில்லை. ஏனெனில், வளரும் குழந்தைகளின் எலும்புகளில் கால்சியம் சத்து அதிகமாகவே இருக்கும். அதோடு, அவர்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவும் கூடுதல் கால்சியம் கிடைத்து, அது அவர்களின் எலும்பை உறுதியாக்கும்.
வயதானவர்கள்... உணவுப் பழக்கம், நடைபயிற்சி, மூட்டு மற்றும் சதைகளை அசைப்பதற்கான உடற்பயிற்சி போன்றவற்றால் மட்டுமே எலும்பை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள லாம்'' என்று சொன்னார் டாக்டர்.
''உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதோடு, நான் சொல்லும் உணவு களையும் சாப்பிடுங்கள், நிச்சயமாக உங்கள் எலும்புகள் உறுதியாகும். அதற்கு நான் கியாரண்டி'' என்று நம்பிக்கையோடு பேசும் செஃப் ஜேக்கப், கால்சியம், புரதம் நிறைந்த உணவு ரெசிபிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
பாலக் பனீர்!
தேவையானவை பனீர் - 5 துண்டுகள் (25 கிராம்), பாலக்கீரை - 50 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் (5 கிராம்), பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், க்ரீம் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், சிறியதான (20 கிராம் இருக்கலாம்) தக்காளி, வெங்காயம் - தலா 1, உப்பு - தேவையான அளவு.
|