தேவையானவை பாகற்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், பூசணிக்காய் - தலா 4 துண்டுகள், மொச்சை (தோலுரித்தது) - 1 கப், அவரைக்காய் - 4, வாழைக்காய் - அரை காய், பீன்ஸ் - 10, கேரட் - 1, தேங்காய் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் - 1, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை எல்லா காய்களையும் சுத்தம் செய்து, உப்பு சேர்த்து வேக விடவும், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்துள்ள காய்களுடன் அரைத்ததை விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு இது, சைட் டிஷ் தேவைப்படாத விட்டமின் கூட்டு!
இலை வடகம்
|