Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
வாசகிகள் கைமணம்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவல் புட்டு... வெளுத்துக் கட்டு!

வேர்க்கடலை - அவல் புட்டு

வாசகிகள் கைமணம்!

தேவையானவை பொடித்த அவல் - ஒரு கப், வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை பொடித்த அவல், வேர்க்கடலை இவை இரண்டுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, புட்டு மாவு பதத்தில் பிசையவும். புட்டுக்குழலில் தேங்காய் துருவலைப் போட்டு, அதன் மேல் அவல் கலவையை வைத்து அழுத்தி, மீண்டும் தேங்காய் துருவலைப் பரப்பி கையால் சற்று இறுக்கமாக அமிழ்த்தவும். பிறகு, ஒரு குச்சியால் குழலின் உள்ளே தள்ளி, ஆவியில் வேக வைத்து இறக்க-வும்.

பனங்கல்கண்டு (அ) குருமாவுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

- அங்கயற்கண்ணி அம்மையப்பன், திருநெல்வேலி

கேரட் - ஃப்ரூட் பாயசம்

தேவையானவை துருவிய கேரட், சர்க்கரை - தலா ஒரு கப், கனிந்த வாழைப்பழம், பேரீச்சம்பழம் - தலா 2, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, உலர்ந்த திராட்சை - 12, பால் - 2 கப், குங்குமப்பூ - சிறிதளவு, நெய் - 3 டீஸ்பூன்.

வாசகிகள் கைமணம்!

செய்முறை கேரட் துருவலை வேக வைத்துக் கொள்ளவும். வாழைப்பழம், பேரீச்சம் பழம், முந்திரி, திராட்சையை சிறு துண்டு-களாக நறுக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்த-தும், வெந்த கேரட், பழத் துண்டுகள், முந்திரியைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, பாலில் குங்குமப்பூவை கரைத்து சேர்க்கவும்.

- ஆர்.பத்மப்ரியா, ஹூப்ளி

பெப்பர் நிப்பட்

தேவையானவை வறுத்து அரைத்த பச்சரிசி மாவு - 2 கப், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, வேர்க்கடலை - 2 டீஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் - 4 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை காய்ந்த மிளகாய், தேங்காய் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகுத் தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை, உப்பு, ஊற வைத்த கடலைப்பருப்பு, வெண்ணெய் (அ)நெய் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டைகளைப் போட்டு இருபுறம் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

வேர்க்கடலை - அவல் புட்டு பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்கலாம். இன்னும் சத்தும், சுவையும் கூடும்.

கேரட் - ஃப்ரூட் பாயசம் கேரட்டுக்கு பதிலாக பரங்கிக்காயை வேக வைத்து அரைத்து பரங்கி பாயசமும் செய்யலாம்.

பெப்பர் நிப்பட் மாவுகளை சேர்த்துப் பிசையும்போது ஒரு டீஸ்பூன் கசகசாவை சேர்த்து செய்தால் ருசி அற்புதமாக இருக்கும்.

வாசகிகள் கைமணம்!
-
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism