Published:Updated:

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

Published:Updated:

'செஃப்' ஜேக்கப்
கிச்சன் கிளினிக்!
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?
அல்சரைத் துரத்தியடிக்கும் தேங்காய் அல்வா!

கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !

ல்சர் பற்றி கடந்த சில இதழ்களாக பேசிவரும் சென்னை, அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன், தொடர்கிறார்...

''அல்சருக்கு முக்கிய காரணியாக இருக்கும் ஹெச் பைலோரை கிருமியை அழிப்பதற்கு தற்போது மருந்துகள் வந்துவிட்டன. ஒரு வாரமோ (அ) இரண்டு வாரமோ சாப்பிட்டால் புண் நன்றாக ஆறிவிடும். இந்தக் கிருமியை ஒழித்தாலும் சிலருக்கு புண் ஆறுவது தள்ளிப் போகலாம். புகை, குடிப்பழக்கம் போன்றவை உள்ளவர்கள், அல்சருக்கான மருந்துகளை உட்கொள்ளும்போதும் அத்தகைய பழக்கத்தைத் தொடர்ந்தால்... ஆறு மாதங்களானாலும் அல்சர் புண் ஆறாது.

வயதானவர்கள் மூட்டுவலி, கால்வலி போன்றவைக்காக வலிநிவாரணிகளை உட்கொள்ளும்போதும் அது அல்சரில் கொண்டுபோய் விடக்கூடும். பொதுவாக வயிற்றுவலிதான் அல்சருக்கான முதல் அடையாளமே. ஆனால், வலிநிவாரணிகளால் வரும் அல்சரில் சிலருக்கு வலியே தெரியாது. முதல்முறையாக ரத்தவாந்தி (அ) குடலில் ஓட்டை விழுந்து தான் ஆஸ்பத்திரிக்கே வருவார்கள். இதற்கான மருந்து கொடுத்து கன்ட்ரோல் செய்யலாம். சரியாகாவில்லையென்றால் எண்டாஸ் கோபி சிகிச்சை செய்யலாம். 15 நிமிடங்களில் இந்த சிகிச்சை முடிந்துவிடும். இதற்குப் பிறகும் அல்சரின் வீரியம் அதிகமாக இருந்தால் ஆபரேஷன்தான் தீர்வு" என்றார் சந்திரசேகரன்.

கிச்சன் கிளினிக் !

இதைக்கேட்டதுமே... "ஆபரேஷன் அளவுக்கெல்லாம் ஏன் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். ஆரம்பத்திலேயே அதைக் கண்டுணர்ந்து... முழுக்க முழுக்க உணவின் மூலமாகவே குணப்படுத்தி விட முடியுமே!'' என்று ஆறுதல் சொல்லும் 'செஃப்' ஜேக்கப்...

''ஆறாத அல்சர் புண்ணையும் ஆற்றக்கூடிய அருமருந்து தேங்காயில்தான் அதிகமாக இருக்கிறது. தேங்காயில் செய்த உணவுகள்... கார, அமிலங்களை விரட்டி, வயிற்றைக் குளிர வைக்கும்!" என்றபடியே ரெசிபிகள் இரண்டை எடுத்து வைத்தார்.

தேங்காய் அல்வா

தேவையானவை தேங்காய்ப்பால் - 2 கப் (300 மில்லி), தேங்காய்ப்பால் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கப் (150 கிராம்), அரிசி மாவு - 100 கிராம், நெய் - 50 கிராம், தேங்காய் துருவல் - அரை மூடி (50 கிராம்).

கிச்சன் கிளினிக் !

செய்முறை அடிகனமான பாத்திரத்தில் பாதி அளவு நெய் விட்டு, அரிசி மாவை வறுத்துக் கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் தேங்காய் துருவலை வறுத்துக் கொள்ளளவும். அரிசி மாவு வறுத்த பாத்திரத்தில் தேங்காய்ப் பாலை விட்டு கொதிக்க வைத்து... அரிசி மாவு, மீதமுள்ள நெய், சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். இதில் தேங்காய் பால் பவுடரை சேர்த்து வெந்ததும், நெய்யில் வறுத்த தேங்காய் துருவலை கலந்து கிளறவும். பிறகு, ஒரு தட்டில் கொட்டி ஆறியதும், துண்டுகள் போடவும்.

தேங்காய்ப்பால் பாயசம்

தேவையானவை கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப் (300 மில்லி), 'திக்'காக காய்ச்சிய பால் - 2 கப் (300 மில்லி), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (20 கிராம்), தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் சீவல் - 5 (20 கிராம்), சர்க்கரை - 50 கிராம்.

செய்முறை தேங்காய் எண்ணெயில் தேங்காய் துருவல், தேங்காய் சீவலை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் காய்ச்சிய பாலை விட்டு, சர்க்கரை சேர்த்துக் கெட்டியானதும், தேங்காய்ப் பாலை விடவும். நன்றாக கெட்டி பதத்தில் வந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியில் வறுத்த தேங்காய் சீவலைப் போட்டு கொதித்ததும் இறக்கவும்.

இந்த பாயசம் நீர்த்துப்போனதுபோலவே இருக்கும். கெட்டியாக தேவையென்றால் 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடரை கரைத்து விடலாம். அல்லது தேங்காய்ப்பால் கொதிக்க விடும்போது ஒரு உருண்டை சாதத்தைக் கலந்துவிடலாம்.

கிச்சன் கிளினிக் !

'டயட்டீஷியன்' கருத்து...

"இவை அல்சருக்கேற்ற அசத்தல் உணவுகள்தான்'' என்று சர்டிஃபிகேட் கொடுத்த 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி,

''இந்த இரண்டு ரெசிபியிலுமே கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ஒபிசிட்டி, சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்துக் கொள்வது நல்லது. தேங்காய்ப்பாலையும் சிறிது குறைத்துச் சேர்க்கலாம். அல்சர் மட்டுமே இருப்பவர்களுக்கு இவை மிகச்சிறந்த உணவு. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடலாம்.

நாங்கள் பெப்டிக் அல்சர், முத்தின அல்சர் போன்றவற்றுக்கு 'சிப்பி டயட்' முறையை கடைப்பிடிக்கிறோம். பால், க்ரீம், வெண்ணெய் இவற்றை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டே இருப்போம். இதனால், புண் விரைவில் ஆறி, உடம்புக்கு நல்ல எனர்ஜியும் கிடைத்துவிடும்'' என்று சொன்ன கிருஷ்ண மூர்த்தி,

''அல்சர் இருப்பவர்கள் எப்போதும் உணவை குளிர்ச்சியாக சாப்பிடுவது நல்லது" என்று டிப்ஸூம் கொடுத்தார்.

கிச்சன் கிளினிக் !
- பரிமாறுவோம்...
படங்கள் எம்.உசேன்
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism