''பால், தயிர், சீஸ், பழங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சுவையாகச் செய்து சாப்பிடும்போது, எலும்பு தேய்மானம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதோ, எலும்புகளை ஸ்ட்ராங்காக்க நான் தயார். சாப்பிட நீங்க தயாரா?'' என்றபடியே ரெசிபிகளை தந்தார் 'செஃப்' ஜேக்கப்.
கஸ்டர்ட் ஆப்பிள் ஸ்மூத்தி
தேவையானவை சீதாப்பழம் - 2, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், க்ரீம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை சீதாப்பழத்தை நன்றாகக் கழுவி, உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் சர்க்கரை, பால், க்ரீம் சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் 'திக்'காக அரைத்தெடுத்தால்... ஸ்மூத்தி ரெடி!
காலை அல்லது மதிய உணவுக்கு முன்பாக குடிக்கலாம்.
ஸ்ப்ரவுட்ஸ் சாலட்
தேவையானவை நான்கு வகையான முளைகட்டிய பயறு - 100 கிராம், ஆலிவ் ஆயில், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 5 முதல் 6 துளிகள், தேன் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக் கிய வெங்காயம், உப்பு - சிறிதளவு.
செய்முறை பயறு வகைகளை நன்றாகக் கழுவி, சூடான தண்ணீரில் போட்டு, பத்து நிமிடம் மூடி வைத்துவிடுங்கள். பிறகு, வெளியில் எடுத்து உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், எலுமிச்சைச் சாறு, தேன், ஆலிவ் ஆயில், வெங்காயம் சேர்த்துக் கலக்கினால், ஸ்ப்ரவுட்ஸ் சாலட் தயார்.
இதை மாலை டிபனாக எடுத்துக் கொள்ளலாம்.
சீஸ் டிப்
தேவையானவை கெட்டித் தயிர் - ஒரு கப், சீஸ் - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 முதல் 4 துளிகள், க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு.
|