வறுத்து அரைக்க காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன்.
தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளியோடு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அதில் மசித்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் தனியா மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் மணக்கும் சாம்பார் ரெடி.
கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுத்கவும். உடனே அதனை சாம்பாரில் போட்டெடுத்து, ட்ரேயில் அடுக்கவும். பரிமாறுவதற்கு முன், சூடான சாம்பாரை மேலே ஊற்றி... நெய் விட்டுப் பரிமாறவும்.
சன்னா மசாலா
தேவையானவை சன்னா - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளிச் சாறு - ஒரு கப், புளி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மசாலாவுக்கு வெங்காயம் - 2, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.
|