Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

வாசகிகள் கைமணம்
படங்கள் வி.செந்தில்குமார்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உளுந்தங்கேசரி ஓஹோ !

தக்காளி பர்ஃபி

தேவையானவை தக்காளி - 3, தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - இரண்டரை கப்.

வாசகிகள் கைமணம்!

செய்முறை கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு தோலை உரித்து விட்டு ஜூஸாக்கவும்.

தேங்காய் துருவல், தக்காளி ஜூஸ், சர்க்கரை ஆகியவற்றை அடி கனமான, அகலமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைத்து கரண்டியால் கிளறவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், எசன்ஸ் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

இந்த பர்ஃபி புளிப்பு, இனிப்பு என புதுவித சுவையில் இருக்கும் .

ஜே.வினோதா ஜெயசந்திரன், கோவை


மொச்சைப்பருப்பு சூப்

தேவையானவை மொச்சைப்பருப்பு - 50 கிராம், புளி - எலுமிச்சம்பழம் அளவு, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை மொச்சைப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்து, வெந்த பருப்பில் கொட்டி, ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.

புரதச்சத்து நிறைந்த சூப் இது. செ.கலைவாணி, சென்னை-16


உளுத்தம்பருப்பு கேசரி

தேவையானவை முழு உளுத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிபருப்பு, பிஸ்தா, பாதாம்பருப்பு - தலா 6.

வாசகிகள் கைமணம்!

செய்முறை உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும் (ரவை போல). கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து நன்றாகக் கொதித்ததும் பொடித்து வைத்திருக்கும் உளுந்தை சிறிது சிறிதாகக் கொட்டிக் கிளறவும். இடையிடையே நெய் விட்டுக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் இறக்கி, நெய் தடவிய ஒரு தட்டில் போட்டு சமப்படுத்தி, அதன் மேல் ஏலக்காய்தூள் தூவவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுத்து போடவும். ருசியான கேசரி ரெடி!

உளுத்தம்பருப்பின் நிறமே நன்றாக இருப்பதால், செயற்கையாக கேசரி பவுடர் சேர்க்கத் தேவையில்லை.

என்.உமா லஷ்மி, சென்னை-75


வாசகிகளின் குறிப்புகளைத் தேர்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

தக்காளி பர்ஃபி தக்காளிப் பழத்துக்கு பதிலாக ஆரஞ்சு பழத்திலும் இந்த பர்ஃபி செய்யலாம்.

மொச்சைப் பருப்பு சூப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிறிது வெண்ணெயில் வதக்கி சூப்புடன் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

உளுத்தம்பருப்பு கேசரி ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தால் நன்றாக வரும். டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கும்.

வாசகிகள் கைமணம்!
 
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism