Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

26-03-2010
பரங்கி டிக்கா..பேஷ் பேஷ் !
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முள்ளங்கி தோசை

தேவையானவை துருவிய முள்ளங்கி - 2 கப், கோதுமை மாவு - 4 கப், அரிசி மாவு - கால் கப், கடுகு, பெருங்காயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

 

செய்முறை ஓரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைக்கவும். துருவிய முள்ளங்கியை அந்தக் கரைசலில் போட்டு 5 நிமிடம் ஊற வைக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, மாவில் கொட்டிக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் ஊற்றி, மேலாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு தோசையாக வார்த்து எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

- கே.சீதாலெட்சுமி, பாளையங்கோட்டை

பரங்கி டிக்கா

தேவையானவை பரங்கிக்காய் - 2 கீற்று, பயத்தம்பருப்பு - கால் கப், வெள்ளை ரவை - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, இஞ்சி, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!
பரங்கி டிக்கா

 

செய்முறை பரங்கிக்காயை தோல் சீவி, ஒரே மாதிரி சதுரங்களாக நறுக்கி, அரை வேக்காட்டில் வேக வைத்து எடுக்க வும். பயத்தம்பருப்பை ஊற வைத்து, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதில் ரவையை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பரங்கித் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

இனிப்பு, கார சுவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பரங்கி டிக்கா.

- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37

தாமரைத்தண்டு பேபிகார்ன் மஞ்சூரியன்

தேவையானவை தாமரைத் தண்டுகள், பேபிகார்ன் துண்டுகள் - தலா ஒரு கப், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பூண்டு பல் - 10, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய குடமிளகாய் - தலா கால் கப், சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், கார்ன்ஃப்ளார் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய் சாஸ், ஆலிவ் ஆயில் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

வாசகிகள் கைமணம்!

செய்முறை தாமரைத்தண்டையும் பேபி கார்னை யும் சிப்ஸ§க்கு நறுக்குவதுபோல் மெல்லியதாக நறுக்கி தனித்தனியே உப்பு, சர்க்கரை தூவி பிசறவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தனித்தனியே பொரித்தெடுக்கவும். இன்னொரு கடாயில் ஆலிவ் ஆயிலை ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தாள், வெங்காயம், குடமிளகாயை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி உப்பு போட்டு கொதிக்க விடவும். காய்ந்த மிளகாயை எண்ணெயில் போட்டு தாளித்து சேர்க்கவும். வினிகர், சாஸ் வகைகளைப் போட்டு கார்ன்ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும். அடுப்பை அதிக தீயில் வைத்துக் கிளறி, பொரித்து வைத்திருக் கும் தாமரைத்தண்டு, பேபிகார்ன் துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

ஃப்ரைடு ரைஸ், புலாவுக்கு அருமையான சைட் டிஷ் இது.

- சுகந்தி, பெங்களூரு

வாசகிகள் கைமணம்!
படங்கள் பொன்.காசிராஜன்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism