Published:Updated:

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

Published:Updated:

'செஃப்' ஜேக்கப்
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?
பகுதி 14

கிச்ச்ன் கிளினிக்

கிச்சன் கிளினிக் !

"ஆண்டுதோறும் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக் கொள்வதன் மூலம், வாழ்நாள் முழுவதும் ஆஸ்டியோபெரோசிஸ் எனும் எலும்பு சம்பந்தமான பாதிப்பினை தவிர்க்கலாம்'' என்ற சென்னை, குரோம்பேட்டை, பார்வதி மருத்துவ மனையின் சீஃப் ஆர்த்தோபீடிக் சர்ஜன் டாக்டர் முத்துக்குமார், ‘யாருக்கெல்லாம் இந்த நோய் எளிதில் தாக்கும்' என்பதையும் விவரித்தார்.

''கால்சியம் நிறைந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள், சூரிய வெளிச்சத்தை அறவே பார்க்காதவர்கள் என்று பலரையும் இந்த நோய் நிச்சயம் தாக்கலாம். எலும்பு சேருமிடத்தில் வலி இருக்கும். காலை நகர்த்துதல், அசைத்தல் போன்ற பிசியோதெரபி சிகிச்சை மூலம் எலும்புக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். தினமும், சூரியன் மறையும் பொன்னிற மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. சூரிய ஒளியின் அல்ட்ரா கதிர்கள் பட்டு, உடம்பில் விட்டமின்-சி நேரடியாகக் கிடைத்துவிடும்'' என்ற டாக்டர்,

கிச்சன் கிளினிக் !

''பால், தயிர், எள்ளு, சோயா, பனீர், சீஸ், கேழ்வரகு, பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்டியோபொரோசிஸ் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்'' என்று தன் பங்குக்கு கிச்சன் டிப்ஸ்களையும் கொடுத்து அசத்தினார்.

"எந்த நோயும் நம்மை அணுகாமல் இருக்க வேண் டும் என்றால், சத்துக்கள் நிறைந்த உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். பனீர், சோயா, எள்ளில் தயாரிக்கப்பட்ட இந்த மூன்று ரெசிபிகளுமே, எலும்புகளையும் ஸ்ட்ராங்காக்கும்'' என்று தன்னுடைய ஏரியாவை ஸ்ட்ராங்க் ஆக்கிய 'செஃப்' ஜேக்கப் ரெசிபிகளின் செய்முறையைச் சொல்ல ஆரம்பித்தார்...

பனீர் சாலட்

தேவையானவை பனீர் க்யூப்ஸ் - 50 கிராம், மூன்று வித கலர் குடமிளகாய் (நறுக்கியது) - 100 கிராம், கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 5 துளிகள், சாலட் ஆயில், மிளகுத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அப்படியே சாப்பிடலாம்.

நொறுக்குத் தீனியை தவிர்த்துவிட்டு, இந்த சாலட் சாப்பிடுவது, சத்துக்கள் நேரடியாக உடம்பில் ஒட்டுவதற்கு உதவும்.

பீஸ் புலாவ்

தேவையானவை பாசுமதி அரிசி - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1, பச்சைப் பட்டாணி, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் - தலா 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை எள்ளை வறுத்துப் பொடிக்கவும். குக்கரில் நெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும். பிறகு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி... இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு... பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் விட்டு மூடி போடாமல் வேக வைக்கவும். பிறகு, அரிசியைக் களைந்து போட்டு, இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் போடவும். இரண்டு விசில் வந்ததும், அடுப்பை ‘சிம்'மில் வைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். சாதம் லேசான சூட்டில் இருக்கும்போது, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி மூடி ஐந்து நிமிடம் வைக்கவும். மதிய நேரத்துக்கு ஏற்ற மகத்தான உணவு இது.

சோயா பீன்ஸ் தால்

தேவையானவை சோயா பீன்ஸ் - 100 கிராம், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, சீஸ் - 25 கிராம், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மாங்காய்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை சோயா பீன்ஸை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், வெந்த சோயா பீன்ஸைப் போட்டு, மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கி, மாங்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். இதை சப்பாத்தி, பூரி, பிரெட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

‘டயட்டீஷியன்' கருத்து...

கிச்சன் கிளினிக் !

'' 'ஆஸ்டியோபொரோசிஸ்' பாதிப்புக்கு ஏற்ப அற்புதமான ரெசிபிகளை வழங்கியிருக்கிறார் செஃப் ஜேக்கப். இந்த மூன்று உணவிலும் புரதம், கால்சியம், கொழுப்புச் சத்துக்கள் சரியாக அடங்கியுள்ளன. குறிப்பாக, பனீர் சாலட் சாப்பிடும்போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைத்துவிடும். மேலும் விட்டமின்-சி மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் எலும்புகளைத் திடமாக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவைப்படும் கால்சியம் சத்து முழுவதும் சோயா பீன்ஸ் தால் மூலம் கிடைத்துவிடுகிறது. 103 மைக்ரோ கிராம் ஃபோலிக் ஆசிட் இருப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்'' என்கிறார் ‘டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி.

- பரிமாறுவோம்...
படங்கள் எம்.உசேன்

கிச்சன் கிளினிக் !
 
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism