தேவையானவை நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், அரிசி - 2 கப், உளுந்து - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - தலா கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 5, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை வாழைப்பூவை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி, உளுந்தை ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும். இதனுடன் வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து மேலும் நன்றாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி போட்டு வதக்கி, அரைத்த மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி முறுகலாக எடுக்கவும்.
தேங்காய் சட்னி, வெங்காய சட்னியை இதற்கு தொட்டுக்கலாம்.
- மன்னை சதிரா, மன்னார்குடி
தயிர் டிக்கி
தேவையானவை கெட்டித் தயிர் - 2 கப், கோதுமை மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல், கோஸ் துருவல், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - இஞ்சி சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
|