Published:Updated:

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

Published:Updated:

கிச்சன் கிளினிக் !
'செஃப்' ஜேக்கப்
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலச்சிக்கல் தீர்க்கும் மகத்தான ரெசிபிகள் !

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ?

கிச்சன் கிளினிக் !

ரத்தசோகை நோயைப் போக்கும் ரெசிபிகளை கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும் உணவு களைத் தெரிந்துகொள்வோம்...

மலச்சிக்கல் பற்றி பேசுகிறார் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி... ''உடல்நிலை சரியில்லாமல் டாக்டரிடம் சென்றதுமே, 'யூரின், மோஷன் எல்லாம் நல்லா போறதா?' என்றுதான் கேட்பார்கள். அதற்குக் காரணம்... உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மூலமாக இருப்பதே இந்த மலச்சிக்கல்தான். சிலருக்கு வாரம் ஒருமுறைதான் மோஷன் போகும். கழிவுகளை சரியானபடி வெளியே தள்ள முடியாத அளவுக்கு ஆசனவாய்ப்பகுதி மிகவும் இறுகிப் போய் மிகுந்த வலியை ஏற்படுத்தும். சிலசமயம் ரத்தம் கலந்து வரலாம்.

இதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மலசிக்கல் வரலாம். போதிய உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப் பழக்கம், அதிக அளவு மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் நெடுநாள் படுக்கையில் கிடப்பவர்கள், சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுபவர்கள், தோல் நீக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட் மற்றும் பேக்கரி உணவுகள், பரோட்டா போல மைதா மாவில் செய்த கடின உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் நிச்சயம் வரும்.

நாம் உண்ணும் கடினமான உணவுப் பொருட்கள் ஜீரணமாவதற்கு தண்ணீர்தான் மிகமுக்கியமாக உதவி செய்யும். இதுதான் மலச்சிக்கலுக்கான முதல் அருமருந்தும்கூட. தினமும் 2 லிட்டர் முதல் 4 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் பருகுவது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் 6 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். ஜீரணிக்கத் தகுந்த உணவுகளான, முழுப்பயறு, தானியம், கீரை, காய்கறிகள், கேழ்வரகு, கோதுமை போன்ற நார்ச்சத்துள்ள உணவுகள், பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து உணவுகள் நாள் ஒன்றுக்கு 20 முதல் 40 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். அத்திப்பழம், கொய்யா, வாழை, பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள் போன்ற பழவகைகளில், தினமும் நான்கு பழங்களை மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டாலே... சிக்கல் இல்லாமல் மிரண்டு ஓடிவிடும் மலச்சிக்கல்.''

'டயட்டீஷியன்' சொன்னதைக் கேட்டதுமே... ''நான் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டவர்களுக்கு இதுவரை எந்த சிக்கலும் இருந்ததில்லை" என்று சொல்லி பெரிதாகச் சிரித்த செஃப் ஜேக்கப், பழம், காய்கறி, கீரை என்று இயற்கை ஸ்பெஷல் ரெசிபிகளை அடுக்கினார்.

அத்திப்பழ மில்க் ஷேக்

தேவையானவை அத்திப்பழம் - 5, சர்க்கரை, ஐஸ்க்ரீம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப்.

கிச்சன் கிளினிக் !

செய்முறை அத்திப்பழத்தின் தோலை உரித்து சர்க்கரை, ஐஸ்க்ரீம், பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், 'திக்'கான ஜூஸ் ரெடி.

இரவு தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, இந்த ஜூஸை அருந்தலாம் (இரவு உணவுக்குப் பிறகு). நல்ல தூக்கத்தை தருவதுடன் ஜீரணத்தையும் கொடுக்கும். உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும்.

பாலக்-பயத்தம்பருப்பு கூட்டு

தேவையானவை பொடியாக நறுக்கிய பாலக்கீரை - 3 கப், வேக வைத்த பயத்தம்பருப்பு - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

கிச்சன் கிளினிக் !

செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கிய கீரையைப் போட்டு வேகவிடவும். உப்பு, சேர்த்து வெந்ததும், பருப்பைக் கடைந்து அதில் விடவும்.

மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். எக்காரணம் கொண்டும் இரவில் சாப்பிடாதீர்கள்.

திராட்சை ஸ்மூத்தி

தேவையானவை கொட்டை நீக்கிய கறுப்பு திராட்சை - 100 கிராம், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், ஐஸ்க்ரீம் - அரை கப்.

செய்முறை கொடுக்கப்படுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் திராட்சை ஸ்மூத்தி தயார். நன்றாக வெயில் அடிக்கும்போது இதைப் பருகினால்... குளிர்ச்சியாக இருப்பதுடன், உணவையும் வயிற்றில் தங்கவிடாமல் ஜீரணிக்கவும் உதவும்.

கிச்சன் கிளினிக் !

இந்த ரெசிபிகள் பற்றிப் பேசிய 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, ''அத்திப்பழத்தில் ஓரளவு நார்ச்சத்தும், வைட்டமின்-சி சத்தும் கிடைக்கிறது. பால் சேர்ப்பதால் கொழுப்பும் கிடைத்து, நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். சுகர் பேஷன்ட்டுக்கும் இந்த அத்திப்பழ மில்க் ஷேக் நல்ல ரெசிபி.

பாலக்கீரையில் கறிவேப்பிலை சேர்ப்பதால் நல்ல நார்ச்சத்து கிடைக்கிறது. கண்ணுக்குத் தேவையான பீட்டா கரோட்டினும், மாவுச்சத்தும், புரதமும் கிடைத்துவிடுகிறது.

திராட்சை ஸ்மூத்தியிலும் மாவுச்சத்து, புரதம், எனர்ஜி கிடைத்துவிடுகிறது. நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும்.

மொத்தத்தில் இந்த மூன்றுமே மலச்சிக்கலைப் போக்கும் மகத்தான ரெசிபிகள்!'' என்றார்.

கிச்சன் கிளினிக் !
-பரிமாறுவோம்...
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism