Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

வாசகிகள் கைமணம்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சபாஷ் போடவைக்கும் சப்ஜா !


அம்மணி உருண்டை

வாசகிகள் கைமணம்!

தேவையானவை வேர்க்கடலை - ஒரு கப், பொட்டுக்கடலை, எள், அவல், தேங்காய் துருவல் - தலா அரை கப், பேரீச்சம்பழம் - 8, வெல்லப்பொடி - 2 கப்.

செய்முறை வேர்க்கடலை, எள்ளைத் தனித்தனியே வறுக்கவும். வறுத்த வேர்க்கடலையின் தோல் நீக்கி, எள், பொட்டுக்கடலை, அவல், பேரீச்சம்பழம், வெல்லப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து ஒருமுறை சுற்றி எடுத்து கோலிக்குண்டு அளவுக்கு உருண்டைகளாக உருட்டவும். சத்துக்கள் நிறைந்த உருண்டை இது.

- என்.கோமதி, நெல்லை

இலை கொழுக்கட்டை

வாசகிகள் கைமணம்!

தேவையானவை பச்சரிசி, பொடித்த வெல்லம் - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், கெட்டி அவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துண்டுகளாக நறுக்கிய வாழை இலை - 6.

செய்முறை பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கலந்து பூரணம் போல் கிளறவும். அவலைக் கழுவிப் பிழிந்து பூரணத்தோடு சேர்த்துக் கிளறவும். வாழை இலையைத் துடைத்து சிறிது எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை விட்டு, நடுவில் பூரணத்தை வைத்து இலையை மடிக்கவும். இட்லித் தட்டில் மடித்து வைத்த இலைப் பொட்டலங்களை வைத்து, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

-ஆர். ராஜலட்சுமி, ஹுப்ளி

சப்ஜா பானம்

தேவையானவை ஜவ்வரிசி, சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - தலா கால் கப், தாளித்த நீர் மோர் - 4 கப், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை சப்ஜா விதையை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, நான்கு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும், சப்ஜா விதைகளைப் போட்டு இறக்கவும். ஆற வைத்து தாளித்த நீர் மோரை விட்டு, உப்பு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பருகவும். கோடைக்கேற்ற குளிர் பானம் இது.

- எஸ்.ஜனாபாய், சென்னை-40

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமெட்ஸ்...

அம்மணி உருண்டை உருட்டும்போது பாதாம், முந்திரிப் பருப்பை வறுத்து பொடித்து சேர்த்து செய்தால், இன்னும் சத்து கூடும்.

இலை கொழுக்கட்டை ஸ்வீட் பூரணத்துக்கு பதிலாக காய்கறிகளில் காரம் சேர்த்து வதக்கி, கார கொழுக்கட்டையும் செய்யலாம்.

சப்ஜா பானம் வெள்ளரிக்காய், பூசணிக்காயை துருவி சேர்த்தால் குளுகுளுவென டேஸ்ட்டாக இருக்கும்.

வாசகிகள் கைமணம்!
 
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism