''இந்திய அளவில் 60 முதல் 70 சதவிகிதத்தினர் ரத்தசோகையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தசோகை ஏற்படுகிறது. உடம்பில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். குழந்தைகள், பெண்கள், கருவுற்ற தாய்மார்கள்'தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணமே... சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததுதான். மருந்து, மாத்திரைகளை அதிக அளவு உட்கொள்பவர்களுக்கும் ரத்தசோகை வரலாம். மரபு வழியி'லும் இந்தப் பிரச்னை வரலாம்.
உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு'களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட'மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு'களையும் கூடவே சேர்த்துக் கொள்ள'வேண்டும். முட்டை'யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்'சத்துக்களும் அடங்கியிருக்''கின்றன. சிக்கன், மீன், முட்டை, ஈரல் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்'களுக்கு ரத்தசோகை வருவதற்'கான வாய்ப்புகள் குறைவு" என்று சொன்ன டயட்டீஷி'யன்,
"மூச்சுத் திணறல், அசதி, நடக்கவே முடி'யா'மல் போதல், முகம், கண், விரல், கைகள் வெளுத்துப் போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது ரத்தசோகையாக இருக்'கலாம். உடனடி'யாக உணவு விஷயத்'தில் கவனத்தை செலுத்துங்'கள்'' என்று அட்வைஸ் கொடுத்தார்.
இதைக் கேட்டதுமே... ''உணவுதான் உற்சாக'மாக வாழ்வதற்கு ஒரே மருந்து. சத்துள்ள உணவுகளை சரிவி'கிதத்தில் சாப்பிட்டால் போதும். 'ரத்த சோகையா? அப்படினா என்ன..?'னு கேட்பீர்கள். இதோ, ரத்தசோகையை விரட்டியடிக்கவும்... வரவிடா'மல் தடுக்கவும் கூடிய உணவுகள்'' என்றபடியே ரெசிபிகளை அள்ளி வழங்கினார் செஃப் ஜேக்கப்...
பூசணி விதை பாயசம்!
தேவையானவை பூசணி விதை - 150 கிராம், பால் - 250 மில்லி, சர்க்கரை - 75 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -' 10 கிராம், திராட்சை - 5 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
|