தேவையானவை பார்லி - 4 டேபிள்ஸ்பூன், கோதுமை - 4 டேபிள்ஸ்பூன், சோளம் 4 டேபிள்ஸ்பூன், தினை - டேபிள்ஸ்பூன், கம்பு - 4 டேபிள்ஸ்பூன், கேழ்வரகு - 1 கப், பாதாம்பருப்பு - 10, முந்திரிப்பருப்பு - 10, சோயா - 1 கப், கொள்ளு -1 கப், பால் - ஒரு டம்ளர், வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து கொள்ளவும். வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, நைஸாக அரைத்து, பிறகு ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். 4 டேபிள்ஸ்பூன் மாவுக்கு 1 டம்ளர் வீதம் தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கரைத்த மாவை விட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.
குறிப்பு வெயில் காலத்தில் வியர்வையினால் அதிகமான சத்துகள் உடலை விட்டு வெளியேறும். அதை இந்த கஞ்சி ஈடுகட்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இதமான கஞ்சி இது!
வடித்த கஞ்சி
|