Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

பட்டையைக் கிளப்பும் பிரெட் பரோட்டா !
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்தி பொங்கல்

தேவையானவை பச்சரிசி - ஒரு கப், பயத்தம் பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, தக்காளி (விருப்பப்பட்டால்) - 1, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை அரிசி, பருப்பை வாசனை வரும் வரை லேசாக வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு போட்டு, சிவந்ததும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, அரிசி பருப்பு கலவையுடன் சேர்க்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். இதை குக்கரில் வைத்து வெயிட் போட்டு, 5 விசில் வந்ததும் இறக்கவும்.

நெய் சேர்க்காமல் செய்வதால், கொலஸ்ட்ரல் பிரச்னை உள்ளவர்களும் இந்தப் பொங்கலை தைரியமாக சாப்பிடலாம்.

- பி.எஸ்.மங்களா சென்னை-41

பிரெட் பரோட்டா

தேவையானவை பிரெட் துண்டுகள் - 6, வேக வைத்த உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, துருவிய சீஸ் (அ) பனீர் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெண்ணெய் - சிறிதளவு, உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை பிரெட்டின் ஓரங்களை 'கட்' செய்து எடுத்து விட்டு பொடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை விழுதாக அரைக்கவும். சீஸ் (அ) பனீர், வெங்காயம், வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைத் துருவிக் கொள்ளவும். இதனுடன் பிரெட் தூள், பச்சை மிளகாய் விழுதைக் கலந்து, உப்பு, மிளகாய்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, பால் விட்டு மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை கனமான பரோட்டாவாக இட்டு, சூடான தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு சிவந்ததும் எடுத்து, சிறிது வெண்ணைய் தடவவும். இதை சூடாக தக்காளி சாஸ§டன் பரிமாறவும்.

- சீதாலஷ்மி,

தானே கசகசா அல்வா

தேவையானவை கசகசா, பாதாம் - தலா அரை கப், தேங்காய் துருவல் - ஒரு கப், கோவா - கால் கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

வாசகிகள் கைமணம்!

செய்முறை பாதாமை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து தோலுரிக்கவும். பிறகு கசகசா, பாதாமை பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும் பொடித்த பொடிகள், தேங்காய் துருவல், கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற வைத்து பரிமாறவும்.

- வி.சுமித்ரா, சென்னை-51

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஹெல்தி பொங்கல் முந்தைய நாள் ஊற வைத்த பச்சைப்பயறையும் சேர்த்து செய்தால் சத்தும், சுவையும் கூடும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

பிரெட் பரோட்டா உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

கசகசா அல்வா கோவாவுக்கு பதிலாக பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.

வாசகிகள் கைமணம்!
-படங்கள் பொன்.காசிராஜன்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism