Published:Updated:

கிச்சன் கிளினிக் !

கிச்சன் கிளினிக் !

பிரீமியம் ஸ்டோரி

கிச்சன் கிளினிக்!
'செஃப்' ஜேக்கப்
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?

டயரியாவுக்கு தடா போடும் தயிர் பிரெட் !

கிச்சன் கிளினிக் !

மலச்சிக்கலையும் அதைத் தீர்க்கும் மகத்தான உணவு முறைகளையும் சென்ற இதழில் பார்த்தோம். இந்தச் சிக்கலுக்கு நேர் எதிரானது 'டயரியா' Diarrhea எனப்படும் வயிற்றுப்போக்கு.

அதைப் பற்றி பேசுகிறார் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி... ''குடல்களின் இயக்கங்களும், அதிகப்படியான அசைவுகளும் வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. வேறு நோய்களுக்கான மருந்து நம் உடம்புக்கு ஒப்புக் கொள்ளாமல் போதல், குடல்களில் பாக்டீரியா, வைரஸ் தொற்று, பால் ஒவ்வாமை, நாள் பட்ட உணவுகள், சாப்பாட்டின் விஷத்தன்மை, மாசுபட்ட குடிநீர் என்று பல்வேறு காரணங்களாலும் வயிற்றுப் போக்கு வாட்டி எடுத்துவிடும். இதுதவிர, மனரீதியான பாதிப்புகளாலும், பரீட்சை பயத்தினாலும்கூட வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

 

அடிக்கடி அதீத தாகம், வாய்-நாக்கு வறண்டு போதல், தோலிலும் வறட்சி, அடிவயிற்றில் வலி... இவையெல்லாம், வயிற்றுப்போக்குக்கு அறிகுறி. தொடர்ந்து வயிற் றைக் கலக்கிக் கொண்டேயிருக்கும்... பாத்ரூம் போனதும் தண்ணீர் குழாயைத் திறந்துவிட்டது போல் கழிவுகள் பீய்ச்சி அடிக்கும். நாள் ஒன்றுக்கு நான்கு ஐந்து முறை போகும். இரண்டு நாட்களுக்கு இந்த இம்சை தொடர்ந்து இருக்கும். இதனால், உடம்பில் உள்ள தாது உப்புக்கள் குறைந்து, நீர் இழப்பு அதிகமாகி, அடித்துப் போட்டது போல உடம்பு பரிதாபமாகிவிடும். இந்த நிலை ஏற்பட்டால், முதலில் நாம் கண் பதிக்க வேண்டியது உணவு விஷயத்தில்தான்.

மசாலா பொருட்கள், வறுத்து பொரித்த அயிட்டங்கள், பால்... இவற்றை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. ஆறின வெந்நீர் குடிக்கவேண்டும். திரவ உணவுதான் ஏற் றது. நார்ச்சத்தில்லாத பழங்கள், ஜூஸ், இளநீர், மோர், குளூக்கோஸ், அரிசி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, ஆரோரூட் கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து வந்தாலே... வயிற்றுப்போக்கை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்" என்று டயட்டீஷியன் சொன்னதை கேட்ட செஃப் ஜேக்கப்,

''வேதனைப்படவே வேண்டாம். நான் தயாரித்திருக்கும் 'டயட் உணவு ரெசிபி'கள் நிச்சயம் வயிற்றுப் போக்கை வர விடாமல் தடுக்கும். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இந்த உணவுகளைச் சாப்பிடலாம்'' என்றபடியே அவற்றைப் பட்டியலிட்டார்...

நூடுல்ஸ் சூப்

கிச்சன் கிளினிக் !

தேவையானவை நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், சோள மாவு, வெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை கடாயில் வெண் ணெயை போட்டு, உருகியதும் நூடுல்ஸ் சேர்த்து வதக்கவும். இதில் தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும், சோள மாவை தண்ணீ ரில் கரைத்து விடவும். கஞ்சி போல் கொதித்ததும் இறக்கவும். நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை நேரத்தில் சாப்பிடலாம். வயிறும் நிறைவாக இருக்கும்.

பனானா ஜீரா

தேவையானவை வாழைப்பழம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சர்க்கரைப்பாகு - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேன் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை கடாயில் நெய் விட்டு, சர்க்கரைப்பாகு சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து சர்க்கரைப்பாகு உருகி, கெட்டியாக வந்ததும், வாழைப்பழத் தைப் போடவும். கிண்டவே கூடாது. சர்க்கரைப்பாகு வாழைப்பழத்தின் மேல் பரவி முறுக்கிக் கொண்டு நிற் கும். இதன் மேல் தேனை விட்டு சூடாகவோ (அ) 'ஜில்'லென்றோ இரவு நேரத்தில் சாப்பிடலாம்.

தயிர் பிரெட்

தேவையானவை பிரெட் - 4 துண்டுகள், கெட்டித் தயிர் - ஒரு கப், இஞ்சி பேஸ்ட் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை தயிரில் இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிருடன் சேர்த்து ஊறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தயிரில் கொட்டவும்.

மதியம் அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

கிச்சன் கிளினிக் !

ரெசிபிகளை அலசிய 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, ''இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் சூப் செய்யும்போது தாது உப்புக்கள் கிடைத்துவிடும். நிறைய மாவுச்சத்தும், ஓரளவு புரதமும், கொழுப்பும் கிடைக்கிறது. நல்ல ரெசிபி!

வாழைப்பழ ஜீராவில் அதிக அளவு பொட்டாஷியமும், மினரல்ஸ§ம், மாவுச்சத்தும் இருக்கிறது. இதில் மலை வாழைப்பழம் சேர்த்தால் இன்னும் நல்லது. சர்க்கரை சோர்வை போக்கி, நல்ல எனர்ஜியை தரும்.

தயிர் பிரெட், டயரியாவுக்கு அற்புதமான ரெசிபி! தயிரில் உள்ள சோடியம், பொட்டாஷியம் மிகவும் கைகொடுக்கும். அதில் உள்ள ப்ரொபையோடிக்ஸ், கெட்ட பாக்டீரியாவை வெளியில் தள்ளி விடும். மற்றபடி மாவுச்சத்து, மின ரல்ஸ் ஆகியவையும் கிடைத்துவிடு வதால் நல்ல எனெர்ஜியைத் தந்து இழப்பை ஈடு செய்துவிடும்.

ஆக மொத்தத்தில், வயிற்றுப் போக்குக்கு தந்துள்ள இந்த மூன்று ரெசிபிகளுமே முத்தானவைதான்!" என்றார்.

- பரிமாறுவோம்...

கிச்சன் கிளினிக் !
 
கிச்சன் கிளினிக் !
கிச்சன் கிளினிக் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு