பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் கைமணம்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
படங்கள் ஆ.முத்துக்குமார்

ஆலு லாலி பாப்

தேவையானவை வேக வைத்த பேபி உருளைக்கிழங்கு - 10, சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலைப் பொடி - அரை கப், டூத் பிக் (பல் குத்தும் குச்சிகள்) - 10, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, சோள மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் வேக வைத்த உருளைக்கிழங்கைப் போட்டுக் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து வேர்க்கடலைப் பொடியில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். பொரித்த உருளைக்கிழங்கில் 'டூத் பிக்'கை செருகவும்.

- சுல்தானா, கீழக்கரை

அடை உப்புமா

தேவையானவை பச்சரிசி - 200 கிராம், உளுந்து, கடலைப்பருப்பு, தேங்காய் எண்ணெய் - தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் - 7, கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, சீரகம், பெருங்காயம் - சிறிதளவு, துருவிய தேங்காய் - கால் மூடி, வெங்காயம் (நறுக்கியது) - 1, உப்பு - தேவையான அளவு.

செய்முறை அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு, சீரகம் சேர்த்து கெட்டியாக தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

வாசகிகள் கைமணம்!

அடி கனமான கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து உதிர் உதிர் ஆக உப்புமா பதம் வரும் வரை கிளறவும். பொடித்த வேர்க்கடலையைத் தூவி இறக்கவும்.

- பூமா ராகவன், சென்னை-24

கும்பகோணம் கடப்பா

தேவையானவை பயத்தம்பருப்பு - ஒரு கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு - 1, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை - சிறிதளவு, எண்ணெய் - 2 ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை பயத்தம்பருப்பை வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மிளகாய் வாசனை போனதும், வேக வைத்த பயத்தம்பருப்பு, வேக வைத்து மசித்த உருளைகிழங்கை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பிரிஞ்சி இலை, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

- ஈ.சண்முகப்பிரியா, பெங்களூரு

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஆலு லாலி பாப் வேர்க்கடலையுடன் முந்திரி, கசகசாவையும் சேர்த்து அரைத்து தயாரிக்கலாம். டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.

அடை உப்புமா பருப்புக் கலவையுடன் பச்சைப் பயறையும் சேர்த்துக் கொண்டால் அதிக சத்து கிடைக்கும்.

கும்பகோணம் கடப்பா நன்றாக செய்ய வருகிறது... டேஸ்ட்டும் அபாரம்!

வாசகிகள் கைமணம்!
 
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு