செய்முறை ராஜ்மா பீன்சுடன் கறுப்பு உளுந்தை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, வெங்காயம், தக்காளி பேஸ்ட்டை அதனுடன் சேர்த்து, அரை மணி நேரம் வேகவிடவும். இன்னொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, பிரியாணி இலை, கொத்தமல்லி, சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
சப்பாத்தி, ரொட்டியுடன் மாலை வேளைகளில் சாப்பிடலாம்.
சரி, இந்த ரெசிபிகள் பற்றி 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி என்ன நினைக்கிறார் என்று கேட்டுவிடுவோம்...
"ஆப்பிள் சாலடில் அதிக அளவு நீர்ச்சத்து, வைட்டமின் 'சி', தாதுப் பொருட்கள் இருப்பதால், கல்லையும் கரைய வைக்கக்கூடிய அளவுக்கு அற்புதமான சாலட்.
துளசி-தேன் சாதத்தில் மாவுச்சத்துடன், புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் 'ஏ' சத்து இருக்கிறது. சாதம் துவர்ப்புத் தன்மையுடன் இருப்பதால், அதிகமாக தாகம் எடுக்கும். இதனால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.
தால் மக்னியில் புரதம், ஃபோலிக் ஆசிட், தாது உப்புக்கள் கிடைப்பதால் நல்ல எனர்ஜி கிடைக்கும்.
மொத்தத்தில் மூன்றும் சேர்ந்து நல்ல பேலன்ஸ்டு டயட் ஃபுட். இதைத்தவிர, தினமும் காலையில் வாழைத்தண்டு, கற்றாழை, எலுமிச்சை ஜூஸ் வகைகள், பார்லி வாட்டர், இளநீர் போன்றவற்றை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாள் குடித்து வந்தால், கற்கள் கரைந்து சிறுநீர் நன்றாக போகும். அதிக அளவு பழங்களை சேர்த்துக் கொள்வதும் அவசியம். மொத்தத்தில் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் இருக்க, உணவுதான் பிரதானம். அதில் கவனம் வையுங்கள்.''
ஆம், டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி சொல்வதுதானே உண்மை. அதைத்தானே...
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்' என்று சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர். அதாவது, நாம் ஏற்கெனவே உண்ட உணவு நன்றாக செரித்த பிறகு, அடுத்தவேளை உணவைச் சாப்பிட்டு வந்தால், இந்த உடலுக்கு மருந்து என்பதே தேவையில்லை என்பதுதான் அதன் அர்த்தம்.
எனவே, உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த உறுதியெடுப்போம்... இயற்கையோடு இணைந்த உணவுகளை உண்டு, ஆயுளுக்கும் ஆரோக்கியமாக வாழ வழி வகுப்போம்!
இப்போதைக்கு 'கிச்சன் கிளினிக்' தொடர் நிறைவடைகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் சந்திப்போம்.
வாழ்த்துக்கள்!
|