செய்முறை பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கவும். கேழ்வரகு மாவுடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, ஏலக்காய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய பிரண்டைத் துண்டுகளை நெய் விட்டு நன்றாக வதக்கி, கேழ்வரகு மாவு கலவையுடன் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். அரை மணி நேரம் கழித்து சப்பாத்தி போல் இட்டு, சதுரமாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- கே.ஷண்முகப்பிரியா, மேட்டூர் அணை-3
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
எனர்ஜி கட்லெட் புதினா சேர்த்து செய்தால் ஜீரணத்துக்கும் நல்லது. வாசனையாகவும் இருக்கும்.
மிஷ்டி தோய் கலர் சேர்த்து செய்தால், பார்க்க அழகாக இருக்கும்.
பிரண்டை - கேழ்வரகு பிஸ்கட் பிரண்டையை நெய்யில் வதக்கியதும், அதை அரைத்து சேர்த்தால் பிஸ்கட் இன்னும் நன்றாக இருக்கும்.
|