தேவையானவை காராமணி - ஒரு கப், துருவிய கேரட், துருவிய மாங்காய் - தலா கால் கப், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை காராமணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வைத்து குழையாமல் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம் தாளித்து துருவிய கேரட், மாங்காய், போட்டு வதக்கி, வேக வைத்த காராமணி, அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது, சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தை தூவி எடுக்கவும்.
காரசார புட்டு
தேவையானவை புழுங்கல் அரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்களவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
|