செய்முறை இலைகளை நிழலில் உலர்த்தவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாயைப் போட்டு வறுத்து, உலர்ந்த இலைகளையும் சேர்த்துப் போட்டு மிக்ஸியில் பொடிக்கவும். இதில் பெருங்காயத்தூள், உப்பு கலந்து மிக்ஸியை ஒருமுறை சுற்றி எடுக்கவும்.
சாதம் சூடாக இருக்கும்போது, அதில் நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, தேவையான அளவு பொடியைப் போட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
அப்பளம், மோர்க்குழம்பு, வடகம் தொட்டு சாப்பிடலாம். இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
- ஜெயலக்ஷ்மி, புதுடெல்லி-3
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
இஞ்சி சர்பத் சிட்டிகை உப்பு சேர்த்துச் செய்தால்... டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும்.
பீட்ரூட் கோலா உருண்டை புரதச்சத்தை அள்ளித் தரும் அசத்தல் ரெசிபி.
இலைப்பொடி சாதம் தேவைப்பட்டால்... கற்பூரவல்லி, கண்டதிப்பிலி, துளசி போன்ற மருத்துவ இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
|