Published:Updated:

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

வாசகிகள் கைமணம்!

Published:Updated:

சமையல்
வாசகிகள் பக்கம்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்

சாந்தி விஜயகிருஷ்ணன் கமென்ட்ஸ்... சேப்பங்கிழங்கு மஞ்சூரியன் பேஷ்... பேஷ்..!

சேப்பங்கிழங்கு மஞ்சூரியன் சேப்பங்கிழங்கை பிசிறும்போது, சிறிது சோள மாவைக் கலந்து கொண்டால், கிழங்கு கிரிஸ்பியாக இருக்கும்.

கோவைக்காய் - வெந்தயசாதம் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்துக் கலந்தால், வாசனையுடன் சத்தும் கூடும்.

வாசகிகள் கைமணம்!

சேப்பங்கிழங்கு மஞ்சூரியன்

தேவையானவை சேப்பங்கிழங்கு - அரை கிலோ, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பூண்டு, சோள மாவு, தக்காளி சாஸ், சோயா சாஸ், நறுக்கிய வெங்காயத்தாள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டுக் குழையாமல் வேகவிட்டு, தோல் உரித்து, வட்டமாக நறுக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், அரிசி மாவு சேர்த்துப் பிசிறி, இருபது நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சேப்பங்கிழங்கைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்து டிஷ்யூ பேப்பரில் போடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், பூண்டு சேர்த்து வாசனை போக வதக்கவும். சோள மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து இதில் ஊற்றி... தக்காளி சாஸ், சோயா சாஸ், வெங்காயத்தாள் போட்டுக் கிளறவும். பொரித்த கிழங்கையும் போட்டு, கெட்டியானதும் கிளறி இறக்கி வைக்கவும்.

- சுகந்தி முரளி, பெங்களூரு

கோவைக்காய் வெந்தய சாதம்

தேவையானவை பச்சரிசி, நறுக்கிய கோவைக்காய் - தலா 2 கப், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன், மிளகு, தனியா - கால் டீஸ்பூன், சீரகம், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு, வெல்லம் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்!

செய்முறை குக்கரில் 7 கப் தண்ணீர் விட்டு, பச்சரிசியைப் போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து, ஆற விடவும். கோவைக்காயை வட்ட வடிவமாக நறுக்கவும். வெறும் கடாயில் வெந்தயம், காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியாவைப் போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய கோவைக்காயைப் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, வெல்லம், எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். புளிக் கரைசல் பாதியாக சுண்டியதும் இறக்கி வைத்து, சிறிது உப்பு சேர்த்து ஆறிய சாதத்தில் கலந்து, வதங்கிய காய், வெந்தயத்தூள் சேர்த்துக் கலக்கவும். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

- வி.சீதா, மதுரை-20

 

வாசகிகள் கைமணம்!
-படங்கள் வி.செந்தில்குமார்
வாசகிகள் கைமணம்!
வாசகிகள் கைமணம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism