செய்முறை உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு, வெடித்ததும்... நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் விட்டு, நறுக்கிய வெள்ளரிக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இதில், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள் போட்டு கிளறி, கெட்டியானதும் இறக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
- மீனா ரங்கநாதன், சென்னை-33
சீதாப்பழ கேக்
தேவையானவை சீதாப்பழம் - 4, பால், சர்க்கரை - தலா ஒரு கப், மில்க் பிஸ்கட் - 10, பால் பவுடர், நெய் - தலா அரை கப், ஜாதிக்காய்த்தூள் - 2 சிட்டிகை.
செய்முறை பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சீதாப்பழங்களை சுத்தம் செய்து, தோல், விதைகளை நீக்கி, விழுதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
தட்டில் ஒரு டீஸ்பூன் நெய்யை பரவலாகத் தடவவும். 2 டீஸ்பூன் பிஸ்கட் தூளை தனியே எடுத்து வைக்கவும். அடி கனமான கடாயில் சீதாப்பழ விழுதைப் போட்டு... பால், பிஸ்கட் தூள், பால் பவுடர், சர்க்கரை, நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும். இந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டவும். தனியாக எடுத்து வைத்த பிஸ்கட் தூளை மேலாக தூவி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
- ர.கிருஷ்ணவேணி, சென்னை-95
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் அவருடைய கமென்ட்ஸ்...
வெள்ளரி சப்ஜி கடைசியில் இறக்கும்போது, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்தால், ருசி இன்னும் அருமையாக இருக்கும்.
சீதாப்பழ கேக் வேறு பழங்களிலும் இதுபோல் செய்யலாம்.
|