டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !
வாசகிகள் பக்கம்
''ஸ்கூல் லீவு விட்டதால, வீடே குழந்தைங்களோட கூடாரமாகிப் போச்சு. பொறுமையா சமைச்சுப் போட நேரம் கிடைக்காத இந்தச் சூழல்ல... டேஸ்ட் ப்ளஸ் சத்து நிறைஞ்ச 'டூ மினிட்ஸ் ரெசிபி'கள்தான் எங்களுக்கு சூப்பரா கை கொடுக்குது’ என்று வாசகிகளின் பாராட்டு ஒரு பக்கம்... அதேவேகத்தில் வெரைட்டியான ரெசிபிகள் மறுபக்கம் என்று குவிந்த வண்ணம் இருக்கின்றன.!
இந்த இதழுக்காக உங்களுடைய ரெசிபிகளில் இரண்டைத் தேர்ந்தெடுத்து, சமைத்து ருசி பார்தது, தன் கமென்ட்டையும் சேர்த்தே தருகிறார் 'சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். சமைங்க... ஜமாய்ங்க!
பனீர் பக்கோடா

பால் திரிந்து விட்டால்... தண்ணீரை நன்றாகப் பிழிந்துவிட்டு ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு கெட்டியானதும், இதில் சிறிது கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.
- நிரஞ்சனா பட்டாபிராமன், சென்னை-33
கமென்ட்: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்தால் நன்றாக இருக்கும். தீயை மிதமாக வைத்து பொரிக்க வேண்டும். இல்லையென்றால் கருகிவிடும்.
பாதாம் - கோவா லாலிபாப்

சிறிது பாலில், தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர், பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்த கோவா அரை கப் சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு, எடுத்து ஆற வைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, ஐஸ்க்ரீம் ஸ்டிக்கில் வைத்து செருகி, ஒரு டீஸ்பூன் தேன் விட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
- ஜெயலட்சுமி, புதுச்சேரி
கமென்ட்: சிறிது சர்க்கரை பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும். தேனுக்கு பதிலாக சர்க்கரை பாகில் தோய்த்து தரலாம்.
படங்கள்: வி. செந்தில்குமார்
நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு! ரெசிபிகள் விகடன் டாட் காம் (www.vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்! உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள்.
வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது. |