Published:Updated:

ருசி மூலம்!

ஏ.ராம், ஜெ.பாரதி படங்கள்: கே.குணசீலன், ச.வெங்கடேசன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

ருசி மூலம்!

ஏ.ராம், ஜெ.பாரதி படங்கள்: கே.குணசீலன், ச.வெங்கடேசன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
##~##

 மிழ்நாடு என்றால்... ஒரு நாடு இல்லை. குட்டிக் குட்டி நாடுகள் பல ஒன்று சேர்ந்த ஒரு திருநாடு. அந்த ஒவ்வொரு குட்டிக் குட்டி நாட்டுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இங்கே இருக்கிறது. பேசும் மொழி, கும்பிடும் கோயில், அணியும் உடை, கொண்டாடும் விழா... என்று ஒவ்வொன்றிலும் வித்தியாசங்கள் இருந்தாலும்... அத்தனையுமே அழகுதான்! இந்த அழகு லிஸ்ட்டில் உணவுக்கும் கட்டாயம் இடம் உண்டுதானே! அப்படி பிரபலமான சில ஊர்களின் உணவு வகைகளை செய்துபார்க்க உதவும் வகையில், உங்களுக்காக மனம் திறந்து தங்களுடைய ரெசிபி சீக்ரெட்ஸை உடைக்கிறார்கள் அந்தந்த கடையின் உரிமையாளர்கள் மற்றும் மாஸ்டர்கள்!

'ஆம்பூர்’ பிரியாணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மாநிலம் கடந்தும்கூட பல ஊர்களின் போர்டில் பளபளக்கிறது... 'ஆம்பூர் பிரியாணி'! வேலூர் அருகே இருக்கும் இந்த ஆம்பூரின் பிரியாணிக்கு, டிரேட் மார்க் சுவையை வழங்குகிறது 'ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ ஹோட்டல். நான்காவது தலைமுறையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஸ்டார் பிரியாணி ஹோட்டலின் வயது, நூற்றுப் பதின்மூன்று. அதன் உரிமையாளர் மனிர் அகமது, ஆம்பூர் பிரியாணியின் ரெசிபியை வாசகிகளுக்காக இங்கே பகிர்கிறார்.

ருசி மூலம்!

தேவையானவை: சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ, மட்டன் அல்லது சிக்கன்- ஒரு கிலோ, பட்டை, லவங்கம் - தேவையான அளவு, பூண்டு - 150 கிராம், இஞ்சி - 150 கிராம், காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - கால் கிலோ, தக்காளி - 200 கிராம், கொத்தமல்லி, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 150 கிராம், எலுமிச்சம்பழம் - ஒன்று, எண்ணெய் - 250 கிராம், உப்பு - தேவையான அளவு.

ருசி மூலம்!

செய்முறை: இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய்களை அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊறவிடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரோடு மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் மிளகாய் பேஸ்ட் ரெடி. பொதுவாக சிக்கன் பத்து நிமிடத்தில் வெந்துவிடும், மட்டனாக இருந்தால் இளம் கறி, முற்றின கறி என இரண்டு வகை இருக்கிறது. அது வெந்துவிட்டதா என்பதை பார்த்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து அது நன்கு பொரிந்தவுடன் பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, மட்டன் அல்லது சிக்கன், காய்ந்த மிளகாய் பேஸ்ட் 2 டீஸ்பூன் சேர்த்து, அது கறியோடு நன்கு ஒட்டிக் கொள்ளும் வரை வதக்குங்கள். கூடவே நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். பின்பு, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து

ருசி மூலம்!

சுருள வதக்கி, இதில் தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள் (மட்டனோ அல்லது சிக்கனோ 80 சதவிகிதம் வெந்தால் போதும்).

சீரக சம்பா அரிசியை தண்ணீர் விட்டு அரைப்பதத்தில் வேகவைத்து (அதாவது 70 சதவிகிதம் வரை மட்டுமே வேக வேண்டும்) கொள்ளுங்கள். இப்போது வாய் அகன்ற பாத்திரத்தில் வெந்த சாதத்தையும், வெந்த கிரேவியையும் சேர்த்து பதமாகக் கிளறி 'தம்’ போடவேண்டும். அதாவது, அடுப்பை 'சிம்’மில் வைத்து, பாத்திரத்தை அதன் மீதி வைத்து மூடிவிடுங்கள். அதன் மீது சுடு தண்ணீர் கொண்ட பாத்திரத்தை வைத்து மூடிவிடுங்கள். ஒரு கிலோ அரிசிக்கு சுமார் 10 நிமிடம் 'தம்’ போட்டால் போதுமானது. இப்போது ஆம்பூர் பிரியாணி ரெடி. இதை ஐந்து பேருக்கு தாராளமாக விருந்து வைக்கலாம்.

பின் குறிப்பு: ஆம்பூர் பிரியாணியின் சீக்ரெட்டே காய்ந்த மிளகாய் பேஸ்ட்டில்தான் அடங்கியிருக்கிறது.

ருசி மூலம்!

'திருவாரூர்' கடப்பா

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரில் ஆரம்பிக்கப்பட்ட 'வாசன் கபே’... கடப்பா எனும் வித்தியாசமான டிஷ் காரணமாக அந்த பகுதி முழுக்க மணக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மட்டும் காலையில் நாலரை மணியில் இருந்தே கிடைக்கும் இந்த கடப்பாவுக்கு... நாடு விட்டு நாடு போயிருக்கும் அப்பகுதிவாசிகள் இன்றைக்கும் அடிமை என்பது அதிசய செய்தியே! அந்த கடப்பா சுவைக்கு காரணம்... அன்று தொடங்கி, இன்று வரை அந்த கைப்பக்குவத்திலேயே அது தயாராகிக் கொண்டிருப்பதுதான்! அந்த ரெசிபி சீக்ரெட்டை இங்கே உடைக்கிறார் ரவி மாஸ்டர்... உங்களுக்காக!

ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்குத் தேவையான கடப்பா செய்ய...

தேவையானவை: பயத்தம்பருப்பு - 100 கிராம் (வேக வைத்துக் கொள்ளுங்கள்), பொட்டுக்கடலை (வறுகடலை, உடைத்த கடலை) - 50 கிராம், சோம்பு - 25 கிராம், பட்டை - 10 கிராம், கசகசா - 20 கிராம், வனஸ்பதி - 50 கிராம், சின்ன வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், பூண்டு - 50 கிராம், இஞ்சி - 25 கிராம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை - தலா 2, தேங்காய் - ஒரு மூடி, கேரட் - 2 (வட்டமாக ஸ்லைஸ் செய்து கொள்ளவும்), நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு. எலுமிச்சம்பழம் - ஒன்று, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்துக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.

ருசி மூலம்!

செய்முறை: பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். இதனு டன் கசகசா, தேங்காய், 10 கிராம் சோம்பு, 30 கிராம் பூண்டு, 25 கிராம் இஞ்சி சேர்த்து ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் பட்டை, சோம்பு, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, வனஸ்பதி முழுவதையும் ஊற்றுங்கள். சூடா னதும் கிராம்பு, ஏலக்காய், அன் னாசி பூ, ப¤ரிஞ்சி இலையுடன், இடித்து வைத்துள்ள பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து வதக்குங் கள். நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங் கள். அரை லிட்டருக்கு மேலாக தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், கேரட் ஸ்லைஸ், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து வரும்போது, வேக வைத்த பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மறுபடியும் கொதிக்கவிடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும்... கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலைகளைத் தூவி, எலுமிச்சைச் சாறு விட்டு இறக்கவும். பின்பு, வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து குழம்பில் தூவி, கரண்டியால் கலக்கிவிடுங்கள்.

இட்லி, தோசைக்கு ஏற்ற வித்தியாசமான குழம்பு இது.

- அடுத்த இதழிலும் மணக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism