Published:Updated:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

தித்திக்குதே தக்காளி பர்ஃபி! படங்கள்: எம்.உசேன்

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

தித்திக்குதே தக்காளி பர்ஃபி! படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

200  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

சேப்பங்கிழங்கு தேன்குழல்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, அரிசி மாவு - 200 கிராம், பொட்டுக்கடலை மாவு - 200 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை:  சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசையவும். ஒரு கரண்டி எண்ணெயை சூடாக்கி மாவில் ஊற்றி கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, தேன் குழல் பிடியில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

- செ.கலைவாணி, மேட்டூர் அணை-3

தக்காளி பர்ஃபி

தேவையானவை:  பெங்களூர் தக்காளி - 5, சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், முந்திரி - ஒரு கைப்பிடி அளவு, நெய் - 4 டீஸ்பூன்.

ஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்

செய்முறை: தக்காளிப்பழத்தை சுடுநீரில் போட்டு... தோல், விதை நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு தக்காளி விழுது, சர்க்கரை சேர்த்து வதக்கவும். பாதி வற்றியதும் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் பரவலாக போட்டு, சூடு ஆறும் முன்பு முந்திரிப் பருப்பை தூவி அழுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

- பூர்ணிமா, பெங்களூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism