Published:Updated:

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

 வாசகிகள் பக்கம்!

''ஓடி ஓடி உழைக்கும் இந்த உடலுக்கு, நல்ல வலுவைச் சேர்க்கறது... எனர்ஜியான உணவுங்கதான். அப்படி சாப்பிடற உணவெல்லாம் ஏனோதானோனு இருந்தா... நல்லாவா இருக்கும்? அதுக்காகத்தானே விதவிதமா நாம சமைச்சு சாப்பிடறோம்'' என்று சொல்லும் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகம்... வாசகிகளின் 'டூ மினிட்ஸ் ரெசிபி'களில் உடலுக்குக் குளுமையையும், ஆரோக்கியத்தையும் தந்து, நாவுக்கு ருசியையும் கூட்டக் கூடிய இரண்டை தேர்ந்தெடுத்து, சமைத்துப் பார்த்து, தன் கமென்ட்ஸோடு இங்கே வழங்குகிறார்.

 ஆனியன் ஓட்ஸ்

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

ஒரு கப் ஓட்ஸுடன், கால் கப் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை தோசைக்கல்லில் அடைபோல் தட்டி, எண்ணெய்விட்டு, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுத்து, சுடச்சுட பரிமாறவும்.

- இந்திராணி, பொன்னுசாமி, சென்னை-32

கமென்ட்: மேலாக மொறுமொறுப்புடன் நடுவில் பஞ்சு போன்று அருமையாக இருக்கிறது இந்த ரெசிபி. தீயை நிதானமாக எரியவிட்டு, சற்று கனமாக சுடலாம். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்.

முள்ளங்கி  தயிர்  பச்சடி

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

துருவிய முள்ளங்கி 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் அரை டீஸ்பூன், சர்க்கரை, உப்பு... இவற்றையெல்லாம் அதிகம் புளிப்பில்லாத தயிரில் சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய் 2, சிறிதளவு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

- ஆர்.விஜயலட்சுமி, ஹூப்ளி

கமென்ட்: முள்ளங்கியைப் பிழிந்து லேசாக வதக்கி சேர்க்கலாம். விருப்பப்பட்டால்... கேரட், வெள்ளரியை துருவி சேர்க்கலாம்.

 நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு! ரெசிபிகள் விகடன் டாட் காம் www.vikatan.com மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்! உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.

 படங்கள்: வீ.நாகமணி  

அடுத்த கட்டுரைக்கு