Published:Updated:

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

''ச்சும்மா பின்னி எடுக்கறீங்களே..! ஏதோ ரெண்டு, மூணு மாசத்துக்குத்தான் 'டூ மினிட்ஸ் ரெசிபி' வரும்னு பார்த்தா... இப்பவே ரெண்டு, மூணு வருஷத்துக்கு போடற அளவுக்கு குவிக்க ஆரம்பிச்சுட்டீங்க. அவள் வாசகிகள்னா சும்மாவா?'' என்று ஷொட்டு கொடுக்கும் 'சமையல் கலை திலகம்' ரேவதி சண்முகம், இந்த இதழுக் காக தன் கமென்ட்ஸுடன் கொடுக்கும் இரண்டு ரெசிபிகள் இங்கே...

 பிரெட் சான்ட்விச்

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !
##~##

ரெண்டு கேரட், ரெண்டு பெரிய வெங்காயம், ஒரு குடமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து கலந்து, இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்துக் கொடுக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- லலிதா நடராஜன், சிதம்பரம்

கமென்ட்: மேலும் சில காய்கறிகளைச் சேர்த்து, சுருள வதக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பிரெட், சப்பாத்தி, தோசைக்கு சூப்பர் சைட் டிஷ்!

உருளை தோசை

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

வேக வைத்து மசித்த இரண்டு உருளைக்கிழங்குடன், அரை கப் தயிர், ஒரு கப் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஊற்றி மூடி போட்டு சுட்டெடுக்கவும்.

- சங்கரி மகாராஜன், சென்னை-91

கமென்ட்: அரிசி மாவு மட்டும் போட்டால் தோசை வார்ப்பது கஷ்டமாக இருக்கும். 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு (அ) மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, துருவிய சீஸ் சேர்க்கலாம். அந்த டேஸ்டில் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு! ரெசிபிகள் விகடன் டாட் காம் (www.vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்! உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள்.

 வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.